சாட்சி Shreveport, Louisiana USA 63-1128M 1சகோதரன் டான். (Bro. Don) உங்களுக்கு நன்றி. இந்தவிதமான எதிர்பாராத வியப்பிற்க்காக நன்றி, “அது சொன்னது யாராயிருந்தாலும்” உங்களுக்கு மிக்க நன்றி. நான் அந்த சிறிய பாடல்களை ரசித்துக்கொண்டிருந்தேன்; என்னே, அவைகளைக் கேட்க எனக்கு விருப்பம். உங்களுக்குத் தெரியும்; எனக்கு நன்றாக பாடுவதை ரசிப்பேனென்று, நான் இங்கே வரும்போதெல்லாம் எனக்கு அவை அதிகமாக கிடைக்கின்றது, வழக்கமாக சுகமளிக்கும் கூட்டங்களுக்கும் அல்லது மற்ற காரியங்களுக்காக இங்கே வரும்போதெள்ளாம் நான் தனியாய் தங்குவேன். அப்பொழுது, “பையன்கள் அந்த டேப்புகளைக் கொண்டு வந்து கொடுப்பார்கள்” நான் வீட்டிற்கு போகும் போதும், அல்லது அலுவலகத்தில் வேலை செய்யும்படியாய் இருக்குமாயின், நான் அதை போட்டுக் கேட்பேன், மறுபடியும் மறுபடியுமாக நான் அதை போட்டு கேட்பேன், அதில் சொல்லப்பட்டுள்ள எல்லாவற்றையும் நான் கேட்பேன். 2சுவிசேஷத்தில் பழைய நண்பரான சகோதரன். ஜெர்ஹோல்ட்ஸர். (Gerholtzer.) அவர்களை, காலை இங்கே கண்டதிற்காக மிகவும் சந்தோசமாய் இருக்கிறேன். வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கின்றது என்பதை நான் அறிந்து கொள்வதற்க்கு அனேக வருஷங்களுக்கு முன்பே எனக்கு அவரைத் தெரியும். அப்படியாக இன்னும் மற்ற மனிதர்களும் எங்கே இருக்கின்றார்கள் தனிப்பட்ட நண்பர்கள். ஜெபர்ஸன்வில் ஜெப கூடாரத்திலிருந்து, ஒரு பெரிய கூட்டம் கடந்த இரவு இங்கே வந்திருந்ததை குறித்து எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நான், சகோதரன். யங் பிரவுனை. (Young Brown) சந்தித்தேன் “சகோதரன் ஜாக். (Jack). அவருடைய பெயர் யங் என்றும் அவருக்கு பொருத்தமாக இருக்கிறதென்று” சொன்னார். அவருக்கு “அறுபதுக்கும் மேல் வயதாகிவிட்டது என்று அவர் என்னிடம் கூறியபோது” என்னால் அதை நம்பவே முடியவில்லை, முதல்முறை ஷ்ரெவெபோர்ட்டில் பார்த்ததற்கு இப்பொழுது ஒன்றும் மாற்றமே காணப்படவில்லை அது உண்மை, அப்படியே இருக்கின்றார். 3தேவன் நம்மிடம் நல்லவராயிருக்கிறார்; இன்று காலையில் அவர்கள் பாடின விதம் எனக்கு மிகவும் பிடித்த மாய் உள்ளது, அது மிகவும் ஆழமான அர்த்தம் உள்ளதாயிருக்கிறது, அதில் ஏதோ உண்மையான காரியம் இருக்கிறது; உங்களால் அதை பருக முடிந்ததாய் இருந்தது; அவர்கள் 23-ம் சங்கீதத்தை குறித்து அவர்கள் ஏதோ பாடினதை நான் கேட்டபொழுது, ஓ என்று கத்தி அழுவதை என்னால் அடக்க முடியாமல் போயிற்று. அடுத்து வந்தது அவர்கள் மூன்று பேராய் சேர்ந்து பாடின அந்த அருமையான பாடல். அதை குறித்து சற்று சிந்தித்தால் அதில் ஏதோ காரியம் இருக்கின்றது, உனக்குள்ளாகவே நீ உணர்கின்றதும், உன்னுடைய உணர்வுகள் துடித்துக்கொண்டு தேவனுடைய ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறதென்று அறிந்து உணர்கின்றதுமானது, மேலும் நாம் பேசினதும் ஆச்சரியப்பட்டதுமான இந்த காரியங்களெல்லாம் இப்பொழுது சம்பவிக்க போகிறது, அந்த நேரம் வருவதற்கு முன்னர் நம்மில் சிலர் நித்திரை அடையலாம், ஆனால் அது நம்முடைய உயிர்த்தெழுதலை தடை செய்ய போகிறதில்லை, ஏனென்றால் மறுரூபமாகிறவர்களுக்கு வருகின்ற சிலாக்கியத்தை அது கொடுக்கிறது. 4“தேவ எக்காளம் தொனிக்கும் கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள், பின்பு உயிரோடிருக்கும் நாமும் உயிர்த்தெழுதலின்” வரிசை முறையை நீங்கள் கவனித்தீர்களா? “அவர்களோடு கூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு,” நாம் அவரை சந்திக்கும் முன்பதாக! நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கின்றோம், “கர்த்தருக்கு எதிர்கொண்டு போக மேகங்கள் மேல் அவர்களோடு கூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுவோம்” பாருங்கள். “அவர் தேவனாயிருக்கிறார்; பின்னர் அவரை ஆராதிக்கப்படும்படியாய் விரும்புகிறார்” அதுதான் அவருடைய குணாதிசயம், அதாவது ஆராதிக்கப்படுவது; ஏனென்றால் அவர் தேவனாயிருக்கிறார். நாம் அங்கே இருப்போமானால் நம்முடைய ஓரக்கண்ணால் அடுத்தவன் அங்கே இருக்கிறானா என்று பார்ப்போமென்று அறிந்துள்ளார். ஆனால் அப்படியாயிருக்கும் பொழுது அது நிறைவான சுயாதீன ஆராதனையாக இருக்காது, நாம் அங்கே நிற்கும்போது ஒருவரை ஒருவர் சந்தித்து வரவேற்றோம் என்பதை அறிந்தவர்களாக நிற்போம், பின்னர் இவை எல்லாவற்றிர்க்கும் கார்னராகிய அவருடைய பக்கத்தில் நின்றுகொண்டு மீட்பின் கீதங்களை பாடுவோம். அனேக முறைகளிலே சகோதரன் ஜாக் பல முறை கூறியது போல், “அந்த சந்தர்ப்பத்திலே நாம் எதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை அறியாதவர்களாய், தலைகள் தாழ்த்தினவாறு தூதர்கள் பூமியை சுற்றுவார்கள்.” பாருங்கள் ஏனென்றால் அவர்கள் ஒரு போதும் மீட்கப்படவில்லை, நமோ மீட்கப்பட்டவர்களாய் இருக்கிறோம். நாம் எப்படியாக அவரை ராஜாதி ராஜாவாகவும் கர்த்தாதி கர்த்தாவாகவும் முடி சூட்டுவோம். 5எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை நான் எதை குறித்தும் சொல்வதாக நினைக்கவில்லை, இது சாட்சியின் நேரமென்று நினைக்கிறேன் நான் ஒரு சாட்சியை கொடுக்கிறேன். ஆகவே இன்று இரவில் கர்த்தருக்கு சித்தமானால் எனக்குள்ள சிறிய ஒழுங்குகளை பற்றி குறிப்புகளை பார்த்தேன். இன்று இரவு நான் நன்றி தெரிவிக்கும் செய்தி அளிக்கவேண்டி இருக்கிறது, வாரத்தின் எஞ்சியுள்ள நாட்களில் கர்த்தருக்கு சித்தமானால் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்பதை எடுத்துக்கொள்வோம், இந்த நன்றி தெரிவிக்கும் விழாவிற்கு பிறகு நீங்கள் யாவரும் ஒன்று கூட வேண்டுமென விரும்புகிறேன். ஒரு சமயம் ஷ்ரெவெபோர்ட்டில் நடந்த ஒரு பெரிய நினைவுகூருதலான கூட்டம்; சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது, அப்பொழுது உள்ளே வருகின்ற இந்த வெளிப்பாடு நமக்கு வந்தது. இங்கே அந்த கூட்டத்திலேதான் தேவன் மிகவும் வல்லமையாக ஆசீர்வதித்தார் தேவனுடைய மகத்தான பதிவு செய்யப்படும் சுவிசேஷ நிலையத்தில் பெயர் எழுதப்பட்ட அந்த காட்சி ஆத்துமா இரட்சிப்பு அடையுமட்டுமாக இவ்விடத்தில் தொடர்ந்து ஆத்துமாக்கள் இரட்சிப்பு அடைவார்களாக, அதாவது கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு அவருடைய ஆவியில் நிரப்பப்பட்டவர்கள். 6இப்பொழுது நாம் ஒரு நிமிடம் தலைவணங்குவோம், நான் இங்கே ஒரு வேத வார்த்தையை குறித்து நினைக்கிறேன். கர்த்தராகிய இயேசுவே இந்த காலையில் மிகவும் நன்றி உள்ளவர்களாய் இருக்கிறோம். ஆனால் அதை வெளிப்படுத்தி காட்டுவதில் அளவுள்ளவர்களாய் இருக்கிறோம். நாம் விரும்புகின்ற வண்ணமாக நம்முடைய இருதயம் கொடுக்கக்கூடியதாயிருந்தால் நாம் எப்படித் தான் நடந்து கொள்வோமோ என்று அறியோம், அங்கேயோ “தேவன் நம்மில் ஊற்றும் ஆசீர்வாதங்களை, வைத்து வைக்க இடமில்லாமல் போகும்” என்று நீர் சொன்னதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை, 7இதற்காக நாங்கள் மிகவும் நன்றி உள்ளவர்களாய் இருக்கிறோம். எங்கள் தலைகள் தாழ்த்தப்பட்ட வண்ணமாய் உமக்கு நாங்கள் ஏறெடுக்கும் கனமான ஆராதனையை நீர் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று; கர்த்தாவே, நாங்கள் ஜெபிக்கிறோம். நாங்கள் நன்றி உள்ளவர்களாய் இருக்கவேண்டிய அனேக காரியங்கள் எங்களிடம் இருக்கின்றன, எங்களால் அவைகளை வெளிப்படுத்திக் காட்ட முடியவில்லை. ஆனால் தேவனே, உமக்கு நன்றி உண்டாவதாக என்று சொல்லுகிறோம், எல்லாவற்றுக்கும் மேலாக நாங்கள் எதற்கு நன்றி உள்ளவர்களாய் இருக்குறோமென்றால்? தேவன்; உலகத்துக்கு கொடுத்த, அதாவது நம்முடைய மீட்புக்கு ஒரு வழியை உண்டு பண்ணும் படியாக தேவன் தம்முடைய குமாரனை கொடுத்த அந்த பரிசுக்காக நன்றி உள்ளவர்களாய் இருக்கிறோம். நாங்கள் அதற்காக மிகவும் நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம். நாங்கள் அதை அப்படியே அனைத்து கொள்ளுகிறோம்; என்னால் ஞாபகப்படுத்த முடிகிறது “நான் சின்னபையனாக இருந்தது முதற்கொண்டு அதற்காகவே ஜீவித்து வந்தேன்” இப்பொழுதோ, எனக்கு வயதாகிக் கொண்டே போகிறது சூரியன் அஸ்தமிக்குமென்று அறிவேன்; இன்னும் அனேக முறைகள் அல்ல நான் அழைக்கப்படுமட்டுமாக எதற்காக ஜீவித்தேனோ, அதை அனுபவிக்கும்படி நான் போவேன். எனக்கு தெரியும் கர்த்தாவே அதே ராஜ்யத்திலே உடன் பிரஜைகளில் அனேகர் அந்த நேரம் வருவதற்காக இக்காலைவேளையில் அந்த விதமாகவே காத்துக் கொண்டிருக்கிறார்கள்; ஏனென்றால், நாங்கள் எடுத்துக்கொண்ட பிரயாணமானது அவருக்கு சேவை செய்யவும் அந்த மகத்தான வேலையானது நெருங்கி வந்து கொண்டிருக்கிற படியினால், உடன் இருப்பவர்களை நித்திய ஜீவனுக்குள் வழிகாட்ட முயற்சிக்கிறோம். நாங்கள் நினைத்துப் பார்க்கக்கூடியதை காட்டிலும் இன்னும் அதிக நெருக்கமாக இருக்கின்றதை எவ்விதத்திலும் எங்களுக்குள்ளாக உணர முடிகின்றது; நீர் இப்பொழுது எங்களை ஆசீர்வதிக்கும் படியாகவும், இன்று காலையில் எங்களுக்கு கொடுத்துக் கொண்டுள்ள ஆசீர்வாதத்தை தொடர்ந்து கொடுக்கும் படியாய் நாங்கள் ஜெபிக்கின்றோம், இப்பொழுது நாங்கள் உம்முடைய வார்த்தையிலிருந்து ஒரு பகுதியை அல்லது ஓரிரண்டு வசனங்களை வாசிக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் தாமே இந்த வசனங்களையும் ஒரு சாட்சியையும், அவருடைய மகிமைக்கென்று எடுக்கும் படியாய் ஜெபிக்கிறோம், இயேசுவின் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம். ஆமென்... 8நான் ஒரு பகுதியை நினைத்தேன், அது கொரிந்தியரில் உள்ளது, ||கொரிந்தியர்: 9:14.15 வசனங்கள். உங்களுக்காக வேண்டுதல்செய்து, தேவன் உங்களுக்கு அளித்த மிகவும் விசேஷித்த கிருபையினிமித்தம் உங்கள்மேல் வாஞ்சையாயிருக்கிறார்கள். தேவன் அருளிய சொல்லி முடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம். “உங்களுக்குள்ளாக இருக்கின்ற தேவனுடைய கிருபையை குறித்தும் சொல்லி முடியாத ஈவை குறித்தும் ஜனங்களுக்குள்ளாக வாசம் செய்யும் பரிசுத்த ஆவியை குறித்தும்” பவுல் இங்கே பேசுகின்றார். அவர்கள் பெற்றிருந்த காரியங்களுக்காக பரிசுத்த ஆவியானவர் அந்த ஜனங்கள் மீது வந்து, சொல்லி முடியாது தேவ ஈவு அவ்வளவு கொழுமையையும் சுத்தமாயும் இருந்தமைகாக; தேவனுக்கு நன்றியை செலுத்தினான். 9என்னுடைய சிந்தையில் ஒன்றுமில்லை ஆகவே கிறிஸ்துவோடு எனக்கு சில நேரங்களில் கிடைத்த அனுபவத்தை குறித்து ஒருவிதமாக ஒரு சாட்சியை கூறலாமென்று எனினேன். என்னுடைய ஜீவியம் எல்லாவற்றையும் நீங்கள் அறிவீர்கள்; உங்களில் அநேகர், நான் அதை சொல்ல கேட்டிருக்கிறீர்கள். ஆனாலும், இங்கே இருக்கின்ற சில ஜெபக் கூடார ஜனங்களுக்கு இதை சொல்ல வேண்டுமென்று நான் எண்ணினேன், ஜெபக் கூடாரத்தில் உள்ள என்னுடைய சபையார்; நாங்கள் பேசுகின்ற, ஒருக்கால் கூட்டத்தில் மூன்று தேச ஜனங்களை கொண்டதாக இருக்கிறது; மெக்சிகோ, கனடா, ஐக்கிய நாடுகள் ஆகும். இங்கே அன்றொரு நாள் ஒரு ஓய்வுநாள் பாடசாலை ஆராதனைக்கு 28 வித்தியாசமான நாடுகளில் இருந்து வந்த ஜனங்கள் ஐக்கியம் கொண்டனர். தேவனுக்கு மகிமையாக இதை சொல்ல விரும்புகின்றேன்; அன்றைக்கு நாம் இருந்தது போன்று தள்ளப்பட்டவர்களாயும், சபை உலகத்தால் புறக்கணிக்கப்பட்டவகளாயும் இவ்விதமாய் இன்றைக்கு அழைக்கப்படுகின்றோம். இப்படி இருக்க ஜெபங்களினாலும் வேண்டுதலின் மூலமாகவும் எனக்கு உலகில் தெரிந்த எல்லா இடங்களைக் காட்டிலும் இந்த சபையானது தேவனுடைய கிருபையின் மகத்தான தலைமைக்காரியமாய் வளர்ந்துள்ளது; என்பதை பிரயாணங்களில் அறிந்து கொண்டேன். கர்த்தர் இந்த விதமாக கிரியை செய்கின்றதை நான் ஒருபோதும் கண்டதில்லை; அது அப்படியே சொல்லி முடியாததாய் இருக்கிறது எப்படி அவர் அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்பதை மிகவும் எளிமையாக எல்லா இடங்களிலும் இருந்து ஜனங்கள் வருகின்றார்கள்; தேசத்தை சுற்றிலும் இருக்கும் ஜனங்கள் கூடி தேவனுடைய கிருபையை அனுபவித்து; அந்த கிருபையை மற்றவர்களுக்கு பரப்புவதற்காக ஒரு சிறு நிலையமாக இருப்பதற்கு; தேவனுக்கு நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம். 10இப்பொழுது என் ஜீவிய காலமெல்லாம், நான் மேற்கே போக வேண்டும் என்றிருந்தது போல; உங்களிள் அனேகர் கதைகளை வாசித்திருப்பீர்கள் டேப்புகளை கேட்டிருப்பீர்கள். டேப் ஊழியமானது அகில உலக ஊழியமாகியிருக்கிறது; எல்லாவிடத்தும் இருக்கிறது, அது எங்கே மொழிபெயர்க்கப்பட வேண்டுமோ அங்கேயும் அஞ்ஞான நாடுகளுக்கும் பரப்புவதற்கு தேவன் கொண்டுள்ள ஒரே வழி இதுவென்று கருதுகிறேன். ஜெர்மானியில் மற்ற இடங்களிலும், அவர்களுடைய ஆயிரமாயிரம்மான சபையார் இடத்தில் அவர்கள் டேப்புகளை எடுத்துக்கொண்டு போய்; ஏதோ ஒரு சிறு காரியத்தை அவர்கள் காதுகலில் பொருத்திக்கொண்டு கேட்டு அதை அப்படியே இன்னொரு டேப்பில் அவர்கள் பாஷைகளில் பேசுகிறார்கள்; நான் இங்கே நின்றுகொண்டு பேசுவது போல் அந்த ஊழியர்கள் அங்கே நின்றுகொண்டு அதே விதமான உணர்வுடன் நூற்றுக்கணக்கான ஜனங்களுக்கு முன்பாக அவர்களுடைய பாஷையில் பேசுகிறார்கள். நூற்றுக்கணக்கான பேர்கள் இரச்சிக்கப்படுகின்றனர் சுகம் அடைகின்றனர் இந்த டேப்புகள் உலகத்தின் ஊடாக செல்வதன் மூலம் இப்படி சம்பவிக்கின்றது, ஆங்கிலத்தில் இருக்கின்றதையெல்லாம் உலகிலுள்ள அனேக ஜாதிகளான பலப்பல பாஷைகளில் அவைகள் மொழி பெயர்க்க படுகின்றன, கடிதங்களின் மூலமாக அவர்களிடமிருந்து எங்களுக்கு தகவல்கள் கிடைக்கின்றன. 11இப்பொழுது நான் சொல்லுகிறது இது தேவனுடைய மகிமைக்காண ஒரு தனிப்பட்ட சாட்சியாக இருக்கும் போது, கர்த்தருக்கு சித்தமானால் வருகின்ற இரவுகளில் நான்ச் சொல்லியிருக்கின்ற காரியங்களை ஒருக்கால் நீங்கள் புரிந்துகொள்ள உங்களுக்கு இது உதவியாய் இருக்கலாம். நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள், உலகமானதுப் பிளவுப் படுகின்ற ஒரு நிலைமைக்கு அரசியல் ரீதியில்ச் சமூகரீதியில்ப் பொருளாதார ரீதியில் வந்துக் கொண்டிருக்கிறது என்றச் செய்தியை நான் சொல்ல முயற்சித்துக் கொண்டு இருக்கிறது போன்று, அது, “பொருளாதாரத்திலா? அதிகப்பணம் என்று சொல்லுகின்றனறா?” ஆம்! ஆனால் அது எங்கிருந்து வந்து கொண்டிருக்கின்றது இன்றிலிருந்து நாற்பது வருடங்களுக்கு பிறகு, நாம் கொடுக்கப் போகும் வரியிருந்து கடனாக வாங்கப்படுகிறது. அவள் நனைந்து விட்டாள் தேசம் பண வறட்சி ஆகிவிட்டது; இந்த தேசம் அல்ல, ஆனால் அவைகள் எல்லாமுமாக அதை திரும்ப பெற்றுக்கொள்ள எந்த ஒரு வழியும் இல்லை, இந்த தேசத்தை வேறு எதிலேயோ சுழற்றி கொண்டு போகக்கூடிய ஒரு கன்னியாய் அது உள்ளது! நீங்கள் யாவரும் அதில் ஞானவான்கலாய் இருக்கின்றீர்கள்; சரி. உலகத்தின் ஐசுவரியம் இன்றைக்கு யாரிடத்தில் இருக்கின்றது? நிச்சயமாக அது ரோமாபுரியினிடத்தில் தான் அது உள்ளது; நாம் அப்படி செய்கின்ற நேரத்தில் நாம் நொடித்துப் போகின்ற நேரத்தில் இந்த விஸ்கி கம்பெனிக்காரக்கு பக்கபலமாக இருப்பதற்காக இந்தப் பெரிய வியாபாரிகளுக்கு பணம் அவசியமாய் போய்விடும். அந்த நேரத்தில் நாம் என்ன செய்யக்கூடும்? ஒன்று நம்முடைய நாணய நோட்டுகளை மாற்ற வேண்டும், அல்லது பணத்தை கடனாக வாங்க வேண்டும். அவர்கள் அப்படி செய்யும் போது அது அவர்களுடைய பிறப்புரிமையை அப்படியே விற்றுப் போடுகின்றதாகும் சரியாக அப்படித்தான் வேதம் சொள்ளுகிறது. 12கர்த்தருக்கு சித்தமானால் கூடாரம் காட்சிக்கு வரும்போது எனக்கு ஒரு ஸ்தலம் கிடைக்க நான் விரும்புகிறேன், அது சீக்கிரத்தில் வரப்போகிறதென்று நான் நம்புகிறேன், சீக்கிரத்தில் நான் உலகம் முழுவதுமாக கூட்டங்கள் நடத்த எனக்கு அழைப்பு வந்து கொண்டிருக்கிறது; நான் ஒரு இடத்தை எடுத்து கொண்டு, ஆறு வாரங்களுக்கு வேதத்தின் ஊடாக முன்னும் பின்னுமாக அலசி இந்தக் காரியங்கள் எல்லாவற்றின் ஊடாகவும் செல்ல வேண்டுமென்று விரும்புகிறேன். நான் ஜீவித்துக் கொண்டு இருக்கின்ற இந்த வேலையைப் பார்க்கும் போது; மலைத்து போக வேண்டியதாய் உள்ளது; அது என்னை பயமுறுத்துகிறது, ஏதோ காரணம்; என்னை பயமுறுத்துகிறது இல்லை, கர்த்தருடைய வருகையானது மிகவும் சமீபமாய் இருக்கிறது என்பதை அறிந்திருக்கின்றபடியால், சந்தோஷ மணி என் இருதயத்தில் ஒலித்துக்கொண்டு இருக்கின்றது; இப்பொழுது, நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறதான இந்த வேளையில், அனேகர் ஆயத்தம் இல்லாதவர்களாக இருக்கின்றார்கள் என்பதை அறியும்போதே; என்னை பயமுறுத்துகிறது! அது மோசமான பகுதியாகும். 13அந்த நேரத்தில் அங்கே காணப்பட்ட அந்த அணில்களின் கதையைக் குறித்து எத்தனை பேர் அறிவீர்கள்? அங்கே நிச்சயமாக எல்லாவிடத்திலும் நான் நினைக்கிறேன், அதுப்போன்று ஏதோ ஒரு காரியம் அன்றொருநாள் நடந்தது; மலைகளை குறித்து அந்தக் கதையை, கீழே வரும்போது தேவன் அந்தக் காரியங்களை அன்றொருநாள் மலையின் மேலே எழுதினாரே அதைக்குறித்து கேள்விப்பட்டு இருப்பீர்கள், நான் ஒரு பிரசங்கியார் அல்ல, யாவருக்கும் அது தெரியும். நான் ஒரு பிரசங்கியார் அல்ல, ஆனால் அது ஆவிக்குரிய ரூபமாக ஆக்கப்பட்டது, காரியங்களை கவனித்து காரியங்கள் சம்பாதிப்பதை கண்டு வரப்போகின்ற காரியங்களை குறித்து ஜனங்களை முன் எச்சரிக்கையாய் இருக்கிறது, நான் அப்படியாய் ஆக்கப்பட்டு உள்ளேன், நீ ஒரு விதமாய் இருக்கின்றதை குறித்து உன்னால் ஒன்றும் செய்ய முடியாதது போன்று என்னாலும் ஒன்றும் செய்ய முடியாது, தேவன் நம் ஒவ்வொருவரையும் ஒரு குறிப்பிட்ட காரியத்தை செய்யும்படியாக நம்மை சரீரத்தில் வைத்திருக்கிறார்; ஒவ்வொரு அசைவையும், ஒவ்வொரு நோக்கத்தையும், ஒவ்வொரு காரியத்தையும், நான் கவனிக்கிறேன்; எல்லா காரியங்களும் ஆவியினால் ஆலப்படுகின்றதாய் இருக்கிறது. 14இந்த சபையானது இங்கே ஒரு காரியத்திற்காக வைக்கப்பட்டுள்ளது, இந்த சபைக்கு பின்னால் ஒரு ஆவி இருக்கின்றது; நிச்சயமாக, உன்னுடைய வீட்டுக்குப் பின்னால் ஒவ்வொரு கண்டத்திற்கும் பின்னால் ஒரு ஆவி இருக்கின்றது; நோக்கம் கருத்து எல்லா காரியங்களுக்கும் பின்னால் ஒரு ஆவி இருக்கிறது; இந்த சபையானது; ஏதோ மனித ஒழுங்கை அல்லது காரியத்தை அதிகமாய் உயர்த்துவதற்காக இங்கே வந்து இருக்குமாயின் அப்பொழுது அதினுடைய நோக்கம் தவறாயிருக்கிறது, ஆனால் அது மட்டும் தேவனுடைய ராஜ்யத்திற்காக, எதையோ அடையும் படி முயற்சித்து கொண்டிருந்தால், நோக்கமானது அத்திசையில் செலுத்தப்படுமாயின் அப்பொழுது அதனுடைய நோக்கமும் கருத்தும் இரண்டும் சரியாய் இருக்கும். 15இப்பொழுது நான் யோசித்து கொண்டிருந்தேன், ஊழியத்தின்த்துவக்கத்தில் இருந்தே ஒன்றாவது இரண்டாவது மூன்றாவது படிவமாக நான் முதலாவது ஷ்ரெவெபோட்டுக்கு வந்தபோது, “என்னுடைய கரத்தின் மேல் உங்களுடைய கரத்தை வையுங்கள், அது அப்படியே காண்பிக்குமென்று” ஜனங்களாகிய உங்களிடத்தில் சொன்னேன், சரியாக உங்கள் குறை என்னவென்று அப்படியே சொல்லப்பட்டது; பரிசுத்த ஆவியானவர் ஒருமுறைகூட தவறவில்லை, அப்பொழுது நான் அதை உங்களிடம் சொன்னேன், “அந்த நாளில் அவர் என்னிடம் ஒரு நேரம் வரும், அப்பொழுது இருதயத்தின் ரகசியங்களை நீ அறிந்து கொள்வாய்” என்று சொன்னார். வார்த்தை அவ்விதம் கூறுகிறதென்று அறியாதவனாய் சொன்னேன், எனக்கு அது தெரியாது, ஆனால் வார்த்தையானது அவ்விதமே சொல்லுகின்றது; தேவனுடைய வார்த்தையானது இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகை இருக்கிறதாய் இருக்கிறது எபிரேயர் 4ம் அதிகாரம். 16இப்பொழுது அந்த வார்த்தையை பாருங்கள்; நீங்கள் ஒரு போதும் அந்த வார்த்தையை விட்டு விடக்கூடாது, அந்த வார்த்தையோடு கூட அது எழுதப்பட்ட வண்ணமாகவே நீங்கள் சரியாக அப்படியே இருக்க வேண்டும். அதற்கு எவ்வித தனிப்பட்ட வியாக்கியானத்தையும் கொடுக்காதீர்கள், அது எப்படியாய் கப்பட்டுள்ளதோ அப்படியே அதை சொல்லுங்கள், அது தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறது. அது தேவனாய் இருக்கிறது, தேவனும் அவருடைய வார்த்தையும் ஒன்றாக இருக்கிறது. நான் கடந்த இரவு சொன்னது போல, “ஒவ்வொரு காலத்திற்கும் ஒரு பகுதியான ஒரு அளவான வார்த்தை வைக்கப்பட்டுள்ளது” அபிஷேகமானது இறங்கி வரும்போது அந்தக் காலத்திற்கான அந்த ஒரு பகுதியான வார்த்தையை அது எடுத்துக்காட்டுகிறது, இன்றைக்கு நாம் எங்கே இருக்கிறோமென்று நீங்களே பாருங்கள்; நாமென்னசெய்து கொண்டிருக்க வேண்டும் என்பதை வாசியுங்கள்! அப்பொழுது எவ்வளவு தூரத்தில் இருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். ஒரே ஒரு காரியம் தான் இன்னமும் செய்யப்பட வேண்டியதாய் உள்ளது என்பதாக நான் காண்கிறேன்; அதாவது இயேசுகிறிஸ்துவினுடைய வருகை எந்த நேரத்திலும் வரலாம்; சபைக்கு ஒரு எடுத்துக் கொல்லப்படுதல்; நாம் அவரை மத்திய ஆகாயத்தில் சந்திக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். அவர் தாம் செய்வேனென்று வாக்களித்துள்ளபடி இந்தக் காரியங்கள் எல்லாம்; இந்த நாட்களில் சம்பவிக்க வேண்டியவைகளாய் இருக்கின்றது. 17இப்பொழுது, சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அதற்கான காலமானது கழிந்த பின்பு, அந்த ஒவ்வொரு காலாளவும் தன் காலத்தை நிறைவேற்றீனது. அவர் தரிசனங்கள் தருகிறார் டேப்புகளை கேட்கும் உங்களில் அனேகர் இப்படியாய் இன்னும் (ஒரு கட்டம் வரப்போகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்,) ஒரு படிவம் வந்து கொண்டிருக்கிறது, (அதை அப்படியே மிகச் சரியான முறையில் வரைந்துள்ளார்.) இதுவரை கண்டிராத படியாய் சரியாக அப்படியே அது சம்பாவித்ததை நேராக கண்டவர்கள்; இங்கே இப்பொழுது உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களை நோக்கி பார்த்துக்கொண்டு இருக்கிறேன்; என்ன சம்பவிக்குமென்று தேவன் சொன்ன காரியங்களை அவர்கள் அதை புகைப்படம் எடுத்துள்ளார்கள். நாங்கள் அங்கே போனோம் சரியாக அவர் எப்படி சொன்னாரோ அதே விதமாக அது அங்கே இருந்தது; 18லைப் பத்திரிக்கையில் மார்ச் பதினேழாம் தேதி வெளியிடை போன்று ஆகாயத்தில் முப்பது மைல் உயரத்தில் 27 மைல் விட்டத்தில் காணப்பட்ட வட்டமான ஒலியை நீங்கள் கண்டிருக்கிறீர்கள் ஏன்? ஈரப்பசையானது ஒன்பது மைல் உயரத்திற்கு மேல் இருக்க முடியாது அவர்களால் அது என்னவாய் இருக்குமென்று கூட கண்டுபிடிக்கமுடியவில்லை. சரியாக அதற்குக் கீழாக நின்றுகொண்டிருந்த ஒரு மனிதன் இப்பொழுது இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்; அவர் அப்பொழுது என் பக்கமாய் நின்று கொண்டிருந்தார். தேவனிடத்திலிருந்து ஏழு தூதர்கள் இறங்கி வந்த போது; பார்க்கும் படியாய் அங்கே நின்றுகொண்டு; கடைசி காலத்தை குறித்தும் வெளிப்படுத்தின விசேஷத்தின் காரியங்கள், ஏழு முத்திரையை குறித்தும் எனக்குச் சொன்னார்: அவர், “வீட்டுக்கு திரும்பி போ: ஒன்றன்பின் ஒன்றாக செய்தியை கொண்டு வருவாய்” என்று சொன்னார்: அது உண்மை. அது அப்படியே மேலாக சென்றது; மலைகளை அசைக்கதக்கதான ஒரு பயங்கரமான முழக்கம் முழங்கி; ஒரு பக்கெட் பருமன் உள்ள மலை துண்டுகள் பெயர்ந்து விழுந்தன; 19சுற்றுமுற்றும் ஒன்றும் இல்லை; செய்தித்தாள் கூட ஒரு ஒலி உடைப்போ, அல்லது ஆகாயவிமானமோ அல்லது ஏதாவது காரியம் சம்பவித்து இருக்கக் கூடுமா என்று பரிசோதித்தனர், ஆனால் அங்கே ஒன்றும் இல்லை, ஒரு ஆகாய விமானம் மேலாக பறக்கவில்லை அங்கே ஒன்றுமே இல்லை. அது மட்டுமல்லாமல் ஒரு விமானம் ஆகாயத்தில் வெடித்து விட்டாலும் அதுபோன்று செய்ய முடியாது. மட்டுமல்லாமல் இது சம்பவிப்பதற்கு ஆறுமாதங்களுக்கு முன்பதாகவே, இந்த விதமாகவே இது இருக்குமென்று முன்னறிவிக்கப்பட்டிருந்தது; அப்படியே அது சம்பவித்தது. நேராக அங்கே டூசானிலும் மற்ற இடங்களிலும் விஞ்ஞானமானது இன்றைக்கும் அதைத் தேடி கொண்டிருக்கிறது, அங்கே மேலே உயர காணப்பட்டது என்னவென்று அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த லைப் செய்தித்தாளை நீங்கள் வாங்கி அதை நோக்கி பார்ப்பீர்களானால்; அந்த ஏழு தூதர்களும் மேலே போகும்போது அவைகளுடைய செட்டைகளை நீங்கள் இன்னமும் காணலாம்; நண்பர்களே இந்தக் காரியங்கள் எல்லாம் சரியாய் உள்ளது என்று நாம் அறிந்திருக்கிறோம், ஓ! சபையானது ஒரு ஆழமான உத்தமத்தோடு இருக்க வேண்டுமென்று ஒரு நேரம் இருக்க வேண்டுமானால், இப்பொழுதே அது அவ்விதம் இருக்க வேண்டியதாய் இருக்கின்றது. இப்பொழுதே!. 20ஆனால், அது எனக்குத் தானே! ஏதோ ஒரு காரியத்தை செய்துள்ளது; ஐந்து வருடங்களாக என்ன தவறாகி விட்டதென்று? ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தேன்! நான் அப்படியே நசுங்கி விட்டேன் என்பது போல் என் இருதயத்தில் நான் உணர்ந்தேன்; என்னால் அது என்னவாய் இருக்குமென்று தீர்வுக்கான முடியவில்லை. இந்தப் பெரிய நெருக்குதலின் நேரத்திலே நான் தேச முழுவதுமாக போய் நான் சுற்றிச் சுற்றி சரி படித்துக்கொண்டே வந்தேன். அரசாங்கமானது என்னை புலன் விசாரித்து கொண்டிருந்தன; ஏனென்றால், நாங்கள் கூட்டம் நடத்தின போது யாரோ ஒருவர், “வில்லியம் பிரன்ஹாம்” என்ற பெயரை எழுதி காசோலையை கொடுத்தார்; நான் அதில் கையெழுத்திட்டு திருப்பிக் கொடுத்துவிட்டேன்; என்னுடைய கூட்டங்கள் எல்லாவற்றுக்குமான ஒரு தொகுப்பு ரசீதுகள் வந்தன, அவைகளை பிரித்து பார்த்தபோது; இந்த காசோலையின் பணமானது கூட்ட தேவைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டதென்று கண்டேன். இருப்பினும் என் பெயருக்கு நான் கையெழுத்திட்ட படியால்; அந்த காசோலை எனக்குத்தான் கொடுக்கப்பட்டது என்பதற்காக நான் அங்கீகாரம் செய்தது போல் ஆகிவிட்டது. ஆகவே நான் அரசாங்கத்திற்கு முப்பதாயிரம் டாலர் கொடுக்க வேண்டியவனாக ஆகிவிட்டேனென்று என்னை குற்றப் படித்தனர். ஆகவே என்னை அவர்கள் வெளியே எங்கும் அனுப்பாமல், இவைகள் எல்லாவற்றின் ஊடாகவும் ஆராய்ந்து பார்த்து தீருமட்டாக என்னை அங்கேயே இருக்க வைத்தனர். நான், “எடுத்துக்கொள்ளவில்லை எல்லாம் கூட்ட செலவுகளுக்கே செலவிடப்பட்டது”என்றேன். அவர்களோ, “ஆம் கூட்டத்துக்கு தான் ஆனால் ஜனங்கள் அந்தக் காசோலையை உன் பேருக்கு அல்லவோ கொடுக்கப்பட்டது” என்றனர், எனவே, “நீர் அதில் கையெழுத்திட்டவுடன் நீங்கள் உங்களை அதனோடு ஐக்கியப்படுத்தி விட்டீர் எனவே அதற்கு நீர் வரி செலுத்த வேண்டும்” என்றனர். நீர், “அதை கையில் சில நிமிடங்கள் அந்த கையில் வைத்திருந்தாலும் அது இன்னமும் உம்முடையது தான் நீர் அதில் கையெழுத்திட்டுள்ளீர்” என்றனர். 21நான், “எனக்கு அது தெரியாது இது சட்டத்திட்டங்கள் இது பற்றின காரியங்கள் ஒன்றும் எனக்கு தெரியாது” என்றேன். நான், “காசோலையில் குத்துவதற்காக ஒரு முத்திரையை வைத்துக்கொள்ள வேண்டுமாம்” நான் நேரடியான கையெழுத்துக்கு பதிலாக நான் கையெழுத்திட்ட போது அது எனக்கு என்று அர்த்தமாகி விட்டது. பின்னர், எல்லா செலவு தணிக்கை காகிதம் எல்லாம் ஆராய்ந்து பார்த்து; அந்தப் பணமானது கூட்டங்களுக்கான செலவுகளுக்காக செலவிடப்பட்டுள்ளதென்று கண்டனர்; நான் சபையிலிருந்து ஒரு வாரத்திற்கு 100 டாலர்களை சம்பளமாக பெற்றுக் கொள்கிறேன். அங்கே தர்மகர்த்தாக்கள் உட்கார்ந்துகொண்டு அவைகள் எல்லாவற்றையும் அறிந்துள்ளனர்; அதிலிருந்து எனக்கு கிடைப்பது எல்லாம் அவ்வளவுதான், அப்படி இல்லை என்றால் அது நேராக கூட்டத்தின் செலவுகளுக்கு போய்விடும். 22இப்பொழுது, கடந்த நான்கு அல்லது ஐந்து வருடங்களாக நான் நசுங்கி போவதுபோல் உணர்ந்தேன்; சமீபத்தில் வேட்டைக்கென்று கனடாவுக்கு பிரயாணம் போயிருந்தேன். அப்படி நான் போயிருந்தபோது அங்கே ஒரு மலை ஜாதி முழுவதையுமே கர்த்தராகிய இயேசுவின் இடத்தில் நடத்தும் படியாக தேவன் எனக்கு உதவி செய்தார்; நான் அந்த ஓடைகள் நிறைந்திருக்கும் நேரத்தில் அவர்கள் யாவருக்கும் இயேசு கிறிஸ்து நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கும்படியாக; நான் மட்டும் அங்கு போக வேண்டியதாயிருந்தது; ஏனென்றால், இருதய பாதிப்பால் மரித்துக் கொண்டிருந்த ஒரு ஸ்திரீயை சுகப்படுத்தினதினால் அவர்களுடைய பூசாரி வர மறுத்து விட்டான். அங்கே காட்டிற்குள்ளாக நான் குதிரையில் ஏறி நான்கு மணி நேரம் பிரயாணம் செய்ய வேண்டியதாயிருந்தது; இந்தக் காரியங்கள் சம்பவித்த போது அங்கே உடனிருந்தவர்கள், 23இப்பொழுது, இங்கே உட்கார்ந்துகொண்டு இருக்கிறார்கள்; பின்னர் நான் திரும்பி வரும்போது கொலராடோவில் தங்க வேண்டியிருந்தது அங்கே சில ஊழியர்களையும் நண்பர்களையும் நான் சந்திக்க வேண்டியதாய் இருந்தது; கொலராடோவில் நான் ஒரு வழிகாட்டியாய் இருந்தேன்; ஒரு வேட்டை பயணத்தின்போது நான்தான் அவர்களை அழைத்துச் சென்றேன். அவர்கள் மூன்று அல்லது ஐந்து பேர் அதை அறிவார்கள். இப்பொழுது, இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர்; தேச முழுவதுமாய் இருக்கின்றது போன்று இந்த வருடம் கொலராடோவில் மிகவும் வறட்சியாக இருந்தது. அக்கினி மிகவும் மோசமாகிக் கொண்டு இருந்தது, ஆகவே அவர்கள் வேட்டை காலத்தை கொஞ்சம் நிறுத்தி வைத்திருந்தார்கள். நாங்கள் அப்படியாய் உயரே இருக்கும்போது ஒரு பிரச்சனை எங்களுக்கு வந்தது; அதாவது ஒரு பனிப்புயல் வருகிறதென்று அப்படிப்பட்ட நேரங்களில் மலைகளின் மேல் இருப்பது என்றால் பயங்கரமானது, ஏனென்றால் சில சமயங்களில் நான் கண்டிருக்கிறேன் உங்களுடைய கரத்தையே உங்களால் எத்தனையோ காணவே முடியாது; ஒரு நேரத்தில் சரியாக உனக்கு மேலாக சுமார் இரண்டு மணி நேரத்திற்குள் 30 அடி உயரத்திற்கு பனியானது கொட்டிவிடும்; நீ மடிந்து போவாய். ஆகவே, நான் சகோதரர் இடத்தில் “பனிப்புயல் வருகிறதென்று” நான் காலையில் வெளியே செல்வதற்கு முன்பு சொன்னேன். 24உண்மையாகவே பார்க்கப்போனால் சுமார் நூறு மனிதர்கள் அல்லது அதற்கு அதிகமாக எங்களுக்கு பின்னால் இருக்கிறார்கள்; இங்கே, ஜீப் டிரக்குகளும் எல்லாம் போய்க்கொண்டு இருக்கிறது ஏனென்றால் என்ன சம்பவிக்க போகிறதென்று அவர்கள் யாவரும் அறிந்திருந்தனர்; ஒருவரும் அங்கே தரித்து இருக்கவில்லை மாடுகள் வளர்ப்பவன் மட்டும் அங்கேயே இருந்தான், ஏனெனில் பனிக்காலத்தில் அவன் அங்கேதான் இருப்பான். அங்கு தங்கியிருந்தவைகளில் நாங்கள் ஒரு ஜோடி மட்டும் ஒரு டிரக்மட்டும் தான் அங்கே இருந்தது, நான், “சகோதரரை பார்த்து” கேட்டேன். அவர்களோ, “நாங்கள் இங்கே இருக்க போகிறோம்” என்கின்றார்கள். ஆனபடியினால் நான், “சரி” “இப்பொழுது ஆயத்தமாய் இருங்கள்” என்று சொன்னேன். நாங்கள் வெளியே போய், ஒரு மெதொடிஸ்ட் ஊழியக்காரரும் நானும் சென்று இன்னும் கொஞ்சம் ரோட்டி முதலான ஆகார பொருள்களை கிடைத்தவைகளை வாங்கிக்கொண்டு வந்தேன். அது போய் வருவதற்கு சுமார் 30 மைல்கள் ஆகும், ஆகவே நாங்கள் திரும்பி வந்தோம். சகோதரன் ஜானும் மற்றவர்களும் இங்கே உட்கார்ந்து இருந்தனர், அவர்கள் அதைக் கேட்டு தூரப்போய்விட்டனர் அவர்கள் அந்த நேரத்தில் வெளியேறினர், ஆகவே பனிப்புயல் தொடங்கிவிட்டது; ஆனால் நாங்களோ அங்கேயே தங்கி இருக்க போகிறோம், நான் டூசானுக்கு ஒரு கூட்டத்திற்காக போக வேண்டும் ஆகவே என் மனைவியை தொலைபேசியில் பேசி, “அங்கே நான் போக முடியாது எனவே எனக்கு பதிலாக வேறு யாராவது போகட்டுமென்று” சொன்னேன். 25அடுத்த நாள் நாங்கள் வெளியே புறப்பட்டோம், நான் சொன்னேன், “இப்பொழுது முதலாவதாக மிகவும் மேகம் மந்தாரமாக இருந்தது” மழை பொழிகின்ற சத்தமா அல்லது வேறு ஏதோ காரியமோ உங்கள் காதுகளில் விழும்போது எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் உள்ளே போய்விடுங்கள். ஏனென்றால், ஒரு பத்தோ அல்லது 15 நிமிடங்களுக்குள் உங்களுடைய பாதையை உனக்கு மறைந்து போய்விடும். ஆகவே நான் அவர்களை நிறுத்திவிட்டு மேல் பகுதிக்கு போய் மேல் நோக்கி நடந்து கொண்டே மான்களை தொடர்ந்து சென்றேன். இதற்கு இரண்டு நாட்களுக்குப் முன்னர், டூசானில் நான் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இருந்தேன், நான் மேலாக திரும்பி வந்து கொண்டு இருந்தபோது நான் சுட்டதயே திருப்பி சுட்டேன். நான் ஒரு பெரிய மான் ஒன்றை சுட்டேன் அனேக வருஷங்களாக அதை தேடிக் கொண்டிருந்தேன். மிக உயரத்திலே குண்டு அதை தாக்கியது அது அங்கேயே கீழே விழுந்து மறுத்துவிட்டது என்னால் அதை கண்டுபிடிக்கவே முடியவில்லை சீதோசனமானது மோசமாகிக் கொண்டு போனது. 26நான் உயிரை பொய் தென்படுகிறதா என்று ஒரு பார்வை பார்த்து விட்டு வரலாமென்று எண்ணினேன், நான் மலையின் உச்சிக்கு சென்றபோது, மழை ஆரம்பமாகி சாரைசாரையாக பெய்வதையும்; ஒரு வெள்ளி டாலர் அளவில் பணியானது பெரிது பெரிதாய் வருவதையும்; அப்படியே நான் அங்கே உறைவதையும் காற்று சுழற்றி அடிப்பதையும் நான் கவனித்தேன். அந்த சமயம் எல்லாருமாக தங்கும் இடத்திற்கு ஓட்டம் பிடித்திருப்பார்களென்று எனக்கு தெரியும் சில நொடிகள் நான் காத்திருந்தேன் இந்த புயலில் இந்த நேரத்தில் என்னால் ஒரு போதும் இந்த மானை கண்டுபிடிக்க முடியாதென்று நினைத்தேன். ஆகவே நாங்கள் தொடர்ந்து போனோம் மலையின் கீழ் நோக்கி இறங்க ஆரம்பித்தோம் எனக்கு முன்பாக 10 அடி மட்டும் தான் என்னால் பார்க்க முடிந்தது; அந்த இடத்தை அடைவதற்கு எனக்கு இன்னும் நான்கு அல்லது அதிகமான மைல்கள் தூரம் இருக்கின்றது, அதை அறிந்தவனாக நான் மலையின் கீழாக வந்தேன். அந்த நாட்டை நன்கு அறிந்துள்ளேன், ஏனென்றால் வருஷா வருஷமாக நான் அங்கே கால்நடைகளை கண்காணித்து வந்துள்ளேன். மலைக்குக் கீழாக வந்து சேணங்க்கட்டின இடத்திலிருந்து சுமார் பாதி மைல் தூரத்திற்கு வந்துவிட்டேன், அங்கே இந்த விதமான குறுக்காக போனால் அங்கே குறுக்கே கடந்தால் அது இருக்கின்ற இடம் வரும், 27அந்த பயங்கரமான பாரத்தை நான் உணர்ந்து கொண்டு இருந்தேன். நான் அழுதேன்; நான் ஜெபித்தேன்; நான் அறிக்கையிட்டேன்; நான் என்ன செய்யமுடியும்? நான் என்ன செய்து தான் என்ன? மிகவும் தவறாக ஏதோ ஒன்றை செய்தது போன்று நீங்கள் யாரையோ புண்படுத்தி நீங்கள் அதை சரி செய்ய வேண்டுமென்பதை போன்று, நான் எதற்காக குற்றம் சுமத்தப்பட்டேனோ அது எனக்கு தெரியவில்லை, “கர்த்தாவே நீர் மட்டும் அதை வெளிப்படுத்துவீரானால் நான் அதை சரி செய்து கொள்ளுகிறேன்” என்றேன். ஆனால் நான், “இன்று பிரசங்கித்து என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று அறிந்திருந்தேனோ அதை தான் செய்தேனே தவிர வேற நான் என்ன செய்தேன். உம்முடைய வார்த்தையின் தெளிவும் சுத்தமும் உள்ளவனாக ஜீவிக்க முயற்சித்தேனேயல்லாமல், நான் வேறு என்ன செய்தேன்?” இன்னமும், அந்த பாரம் என்னை விட்டு தீர்ந்த பாடில்லை வருடங்கள் கடந்து விட்டது, அதைக்குறித்து மலையின் மேல் அன்று காலையில் யோசித்து நான் கீழ இறங்க ஆரம்பித்தேன். 28அதற்கு முந்தின நாள் தான் என்னுடைய திருமண நாள் எனக்கும் என் மனைவிக்கும் திருமணமாகி இருபது வருடங்கள் ஆகின்றன. ஒரு திருமண நாளிலும் வீட்டில் இருந்தது இல்லை. நான் எப்பொழுதும் மலைக்குப் போய் அங்கே ஒரு சிறிய இடத்தில் தங்குவது உண்டு, நாங்கள் திருமணம் செய்து கொண்ட முதல் ஆண்டு ஒரு தேனிலவை கொண்டாட கூட என்னிடத்தில் போதிய பணம் இல்லாதிருந்தது. சிறிய பிரயாணமும் பின்னர் ஒரு தேனிலவுக்கு போக வழியில்லை ஆகவே என்னுடைய மனைவியை தேனிலவுக்கு என்று வேட்டைக்கு கூட்டிக்கொண்டு போவேன். அது எப்படி இருந்தது என்றால் ஒரே நேரத்தில் இரண்டையும் அடைவது போல் இருந்தது. எனக்கு ஞாபகம் இருக்கின்றது, நான் சின்னவனாக இருந்தேன் நான் அவளை தூக்கிக்கொண்டு மரத்துண்டுகள் போன்றவைகளை தாண்டி போவேன். நாங்கள் வேறு ஒரு இடத்திற்கு போய் அங்கே அவளை புகைப்படம் எடுத்து விட்டு எப்பொழுதும் அது எங்களுக்கு ஒரு காட்சியாயிருக்கும். அதைக் குறித்தும் அவள் தலைமயிர் எவ்வளவு கருப்பாய் இருக்கும் எவ்வளவு அழகாய் இருக்குமென்று நினைத்தேன் இப்பொழுதோ அது நரைத்துப் போயிற்று, எல்லாம் சில வருஷங்களுக்கு தான் அப்படியானது, நான் அங்கே போக வேண்டுமென்று நினைத்தேன், ஆனால் மிகவும் கடினமாக இருக்குமென்று எண்ணினேன். அப்பொழுது, பனி பயங்கரமாக பெய்துகொண்டிருந்தது; அப்பொழுது பனி பயங்கரமாக பெய்துகொண்டிருந்தது; நான் இருப்பிடத்துக்கு போய்தானாக வேண்டுமென்று தெரியும், ஏனென்றால் அவர்கள் ஒரு பயங்கர பனி புயல் வந்து கொண்டிருக்கின்றதென்று வானொலியில் அறிவித்தனர். அவர்கள் அதை தேசம் முழுவதற்குமாக அறிவித்துவிட்டார்கள், டாம் சிம்ப்சன், இன்று காலையில் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார் இருக்கிறாரா? இல்லையா என்று எனக்கு தெரியாது கனடாவிலிருந்து அவர் வந்து கொண்டிருந்த போது அவர்கள் அதை வானொலியில் ஒளிபரப்பினர், அந்த தேசத்தின் பக்கமாக கூட போக வேண்டுமென்று கூறப்பட்டது, எல்லாரும், “அந்தப்பக்கம் போகாதே வேறு வழியாக போம், ஏனென்றால் ஒரு பயங்கரமான பனிப்புயல் தேசத்தை தாக்குகின்றதென்று” சொன்னார்கள். 29நான் அதைக் குறித்து யோசித்துக்கொண்டு மலையின் அடிவாரத்தை நோக்கி: சுமார் காலை பத்து மணி அளவில் நடந்து வந்து கொண்டிருந்தேன். என்னுடைய சத்தத்தை நீங்கள் எப்படி கேட்டீர்களா அவ்வளவு தெளிவாக சடுதியில் ஒரு சத்தம், “நில் அப்படித் திரும்பி அந்த வழியே போ” என்று என்னோடு சொன்னது. இதை நான் அவிசுவாசிகள் மத்தியில் கூற முடியாது நீங்கள் இதை விசுவாசிகளுக்கு மட்டும்தான் சொல்ல வேண்டும். ஏனென்றால், அவிசுவாசிகள் இதை புரிந்து கொள்ள முடியாது ஆவிக்குரிய காரியங்களை புரிந்துகொள்ள உங்களுக்கு ஆவிக்குரிய சிந்தை உண்டாயிருக்க வேண்டும். வார்த்தையானது ஆவிக்குரியதாக இருக்கிறது அது ஆவிக்குரியதாய் வியாக்காணப்படுகின்றது அது தேவனுடைய வார்த்தையாக இருக்கிறது, நான் திரும்பி போவேனானால் இன்னொரு பாதி மைல் போவேனானால் புயலோ இவ்விதமாய் சீறுகின்றதென்று யோசித்தேன். 30டேவிட் வுட், “எனக்கு ஒரு சாண்ட்விச்சை செய்துகொடுத்து இருந்தார்” அது என்னிடத்தில் இருந்தது, அவருடைய தகப்பனுக்கும் எனக்கும் சமமாய் இருக்கும்படி ஒரு நேரத்தில் ஒன்று என்பது போல் செய்து கொடுத்தார். அப்போழுது எங்களிடம் கொஞ்சம் வெங்காயமும் தேனும் ரொட்டியும் தவிர வேறு ஒன்றும் இல்லை, நான் அதையெல்லாம் ஒன்றாக கலந்து நாங்கள் எங்களுக்கு ஒரு சாண்ட்விச்சை செய்துகொண்டோம். ஆனால் அதை சாப்பிடக்கூட முடியவில்லை என்னோடு கூட அதிலும் இசைந்து போக அதில் முயற்சித்தான் மலையின் மேல் போகும்போது மழையானது அவ்வளவு வேகமாய் பெய்ய அது நனைந்து போய் எல்லாம் சேர்ந்து ஒரே கட்டியாக ஆகிவிட்டது சரி, நான் சாப்பிட்டுவிட்டு காத்திருப்போமென்று எண்ணினேன். நான் அங்கு நின்றுகொண்டு இருந்தபோது அது ஒன்றும் இல்லை வெறும் யூகம் ஒருக்கால் காற்றாய் இருக்கலாம் காற்று அடிக்கிற விதத்தில் மரங்களுக்கிடையில் அவ்வாறு கேட்கிறதென்று நினைத்தேன். நான் நடக்க ஆரம்பித்தேன். என்னால் நடக்க முடியவில்லை, சரி நான் திரும்பி போக வேண்டும்போல் இருக்கின்றதென்று எண்ணினேன். நான் மறுபடியுமாய் அதை என் காதுகளில் கேட்டேன்; “நீ எங்கிருந்து வந்தாயோ அங்கே திரும்பிப்போ” அதை அது சொன்னது. நான் மலைக்கு மேலாக நடக்கத்துவங்க நிறுத்தினேன்; நான் இருந்த இடத்திற்கு திரும்பி போக பயமாக இருந்தது. ஏனென்றால், காற்றானது பலமாக அடித்துக்கொண்டிருந்தது; மிகவும் பயங்கரமாகவும் பாதை தவறியது போன்றதாகவும் காணப்படுகின்ற காரியங்களை சில நேரங்களில் நாம் செய்யும் படியாய் தேவன் அனுமதிப்பார். எகிப்தை மேற்கொள்வதற்கு மோசேயை ஒரு கோகோடு அனுப்பினது எப்படியாயுள்ளது; எல்லாவற்றையும் நாம் அதைப்போன்று இருக்கக் காண்கின்றோம். தேவன் கூடாத காரியங்களை தான் கேட்கிறார், புரிகின்றதா? அதன் படியாய் அவர் சாத்தியமற்றவற்றைச் செய்து, அதனால் மனிதனானவன் செய்தது, தான் அல்ல. தேவனே: அவரே அதை செய்தார்; என்பதை அறியும் படியாக அப்படி செய்வார். 31காற்றின் வேகத்துக்கும் மரங்களின் முரிதலுக்கும் இடையே என் பாதையில் நான் ஏறி மலை உச்சிக்கு சென்றேன், நான் உட்கார்ந்து துப்பாக்கியை எடுத்து பார்வை கண்ணாடி பழுதாக படி மறைத்துக் கொண்டேன். அந்த விதமான நேரத்தில் தான் கரடிகள் ஓடும் ஆகவே துப்பாக்கியை எடுத்து என் சட்டைக்குள்ளாக இப்படி அந்த கண்ணாடியை மறைத்து பத்திரப் படுத்தினேன். ஒரு நிமிடம் உட்கார்ந்து அங்கேயே உட்கார்ந்துகொண்டு நான் என்ன செய்கிறேனென்று நினைத்தேன். ஆனால் தேவன் தம்முடைய அற்புதங்களை நடப்பிக்க வினோதமான வழிகளிலே கிரியை செய்கிறார், மாமிச சிந்தையினால் அறிந்து கொள்வதற்கு அப்பாற்பட்டது, அதனுடைய அவர்களுக்கு ஒரு சனம் தோற்றம் கூட கிடையாது, நான் மேலே ஏறி நடந்து போய் உட்கார்ந்து தேவனைப் பற்றி சிந்தித்துக்கொண்டு இருந்தேன். ஏன் நான் திரும்பி வந்தேன்? என்பதை குறித்து வியந்து கொண்டிருந்தேன். நான் கீழே இறங்கி போகிற நேரத்திற்குள் புயலானது மிகவும் பயங்கரமாக ஆகிக்கொண்டே போகிறது, நெருங்கி வந்து கொண்டே இருக்கிறது, அதிக தூரம் உங்களால் பார்க்க முடியாதென்று எண்ணினேன். 32நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் இது உண்மை. ஒரு சத்தம் என்னுடன் பேசி: “நானே தேவனாகிய கர்த்தர், நான் வானத்தையும் பூமியையும் சிரித்தேன், இயற்கை எனக்கு கீழ் படுகிறதென்று” சொன்னது. பின்னர் கொஞ்சமாக உட்கார்ந்துகொண்டு என் தொப்பியை தலையிலிருந்து கழற்றினேன். அந்த சத்தமானது எங்கிருந்து வந்ததென்று என்னால் அதை காண முடியவில்லை, அங்கே எங்கேயோ மரங்களின் மத்தியில் இருந்து வந்தது என்று நான் நினைத்தேன். வழக்கமாக அந்த ஒளியை நீங்கள் காண்பீர்கள் அதைக் குறித்து நீங்கள் யாவரும் அறிவீர்கள் வழக்கமாக அது அங்கே இருக்கும். ஆனால் நான் எல்லாவிடத்தும் நோக்கி பார்த்தேன் என்னால் அந்த வெளிச்சத்தை காண முடியவில்லை. “ஓ, தேவனே என் சிருஷ்டி கர்த்தரே நீர் எங்கே இருக்கிறீர்” என்று கூறினேன்; நான் சுற்றும் முற்றும் பார்த்தேன், பிறகு என்னால் அதைக் கேட்க முடியவில்லை அவர் சத்தத்தை கேட்க முடியவில்லை நான் சில நிமிடங்கள் காத்திருந்தேன். அவர்: “அணில்கள் உண்டாவதற்கு முன்னே பேச வைத்த தேவனாகிய கர்த்தர் நானே” என்று சொன்னார். அதைக்குறித்து உங்கள் யாவருக்கும் தெரியும். ஆகவே எனக்கு உதவி செய்யுங்கள், இந்த வேதாகமம் எனக்கு முன்பாக இருக்க இந்த நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் நான் சொல்வது உண்மை அல்ல வென்றால் தேவன் என்னை இப்பொழுது இந்த மேடையின் மீதே மரித்துப் போகும்படியாய் அடிக்கட்டும். பாருங்கள். அது உண்மை, அவர் இன்றைக்கும் அவ்வளவு பெரிய சிருஷ்டி கர்த்தராய் இருக்கிறார். ஆபிரகாமுக்கு ஒரு ஆட்டுக்கடாவையும் கொடுக்கக்கூடிய ஒரு தேவன் அவரால் கொடுக்க முடியும். அவர் இன்னமும் யெகோவாயீராய் இருக்கிறார், தேவனால் தேவைகளை சந்திக்க முடியும். 3365-01-25இந்த வேதவாக்கியம் இன்றைய தினம் நிறைவேறிற்று63. ஆபிரகாமுக்கு அந்த செம்மறி ஆட்டுக்கடா எங்கிருந்து வந்தது, மனித சஞ்சாரத்தில் இருந்து மூன்று நாள்ப்பிரயாண தூரம், மலையின் உச்சியில் அங்கே தண்ணீர் ஒன்றும் கிடையாது, அங்கே தன் கொம்புகள் சிக்கினதாக வனாந்தரத்தில் அங்கே ஒரு செம்மறி ஆட்டுக்கடா இருந்தது, அவனுக்கு அங்கே ஒரு செம்மறி ஆடு தேவையாயிருந்தது. ஆபிரகாம் அந்த மலை முழுவதுமாய் சுற்றி கற்களைக் கொண்டுவந்து, இந்தப் பலிபீடத்தை கட்டினான். ஆனால் தேவன் இன்னமும் யெகோவாயிரேவாக இருக்கிறார் தமக்கான தேவையைப் பார்த்துக்கொள்வார். அவர் என்னவெல்லாம் வாக்களித்துள்ளாறோ அவற்றையெல்லாம் செய்ய வல்லவராயிருக்கிறார். மத்தேயுவில் இருக்கின்ற வார்த்தையென்றுத்தான் நான் நினைக்கிறேன், மத்தேயு: 11:22 இந்த மலையைப் பார்த்து நீங்கள் சொல்வீர்களானால். என்னால் அதை புரிந்து கொள்ள முடியவே இல்லை, அதை குறித்ததான கதை உங்களுக்கு தெரியும். ஆகவே எனக்கு உதவி செய்யுங்கள், அது உண்மை. அவர், “அந்த அணில்களை உனக்கு அங்கே உண்டு பண்ணினவர் நான் தான்” என்று சொன்னார். அவர் என்ன சொல்லுவாரென்று பார்க்கும்படியாக நான் மறுபடியுமாய் கவனித்தேன்; ஒன்றும் இன்று போகவில்லை காற்றானது தொடர்ந்து ஊழையிட்டு கொண்டு இருந்தது; சுயநினைவு எனக்கு இருக்கின்றதா என்று காண என்னையே கடித்துக் கொள்ள வேண்டியதாயிருந்தது. 34உங்களுக்கு ஒரு காரியத்தை சொல்லட்டும், உண்மையான ஆவிக்குரிய சிந்தை என்பது புத்திசுயாதீன மற்றதற்கு ஒரு படி முந்தி இருப்பதாகும் உங்களுக்கு அது தெரியுமா? ஒரு விஞ்ஞான ஆராய்ச்சி அதை உனக்கு அறிவிக்கும். இங்கே நீங்கள் மிகவும் கீழாகவும் சோம்பலாகவும் மந்தமாகவும் இருக்கிறார்கள், பின்னர் கொஞ்சம் அதிகமாக ஆவிக்குரியவர்களாக இருப்பீர்களானால் அப்பொழுது இதேபோன்று இருப்பீர்கள். பின்னர் நீ ஒரு மங்கிபோன கோடாரி போன்றாகி, பின்னர் தீட்டப்பட்ட சவரக்கத்தியாகிறீர்கள். அங்கே நீங்கள் எந்தப் பக்கமாக விழுவீர்கள் என்று இப்பொழுது உங்களுக்கு தெரியும், அங்கே ஒரு மனிதன் தன்னை உயர்த்திக் கொள்ளும்படி முயற்சித்தால் அவன் தவறான பாகமாக போவது நிச்சயமாக இருக்கிறது. தேவன் அவனை அங்கே உயர்த்துவாறானால் அவன் ஒரு சாதாரண மனிதனுக்கும் அதிகமாக இருக்கிறான். இங்கேதான் அவர்கள் தரிசனங்கள் மற்ற காரியங்கள் அவனுக்கு உண்டாகிறது, தேவனுடைய ராஜ்யமும் அங்கேதான் இருக்கின்றது, பாவலர்கள் தீர்க்கதரிசிகள் இது போன்றவர்கள் நரம்பு கோளாறுகள் உள்ளவர்களாகக்கருதப்படுகின்றனர். 35இயேசுவானவரையும் கூட, “பைத்தியக்காரனென்று” அழைத்தனர், “நீ ஒரு பைத்தியக்காரன் என்றும், நீ பிசாசு பிடித்தவன் என்றும், எங்களுக்கு தெரியும்” என்றார்கள். காலங்களின் ஊடாக சென்று பாவலர்களையும் தீர்க்கதரிசி களையும் சற்று உற்று நோக்குங்கள், அவர்கள் எல்லாரும் அவ்விதமாகத்தான் கருதப்பட்டனர். நீங்களாகவே உங்களை அந்த நிலைக்கு உயர்த்த முயற்சித்தால்; நீங்கள் அவ்வளவுதான் உங்களால் ஒருபோதும் அதை அடைய முடியாது. சரியானதுக்கும் தவறானதுக்கும் இடையே அந்தக் கூர் முனையில் உங்களைப் பற்றிக் கொண்டிருக்க மகிமையிருந்து ஒரு கரம் வந்து உங்களைத் தாங்க வேண்டும். அந்தக் கூர் முனையில் நின்று கொண்டு தான் அங்கே நோக்கி பியூலா லேண்டிற்கு (Beulah Land) குறுக்கே காணமுடியும். சரி. அந்த மணி நேரத்திலேயே அந்த சத்தமானது அங்கே உட்கார்ந்து கொண்டு இருந்த அதே நேரத்தில் மறுபடியுமாக என்னுடன் பேசினது: “அந்தப் படகின் மேல் நின்று அன்றிரவு காற்றையும் மழையையும் அழிந்துபோக பண்ணினது நான் தான் என்று” அவர் சொன்னார். அவர்: “காலூன்றி எழும்பி நில் இந்தப் புயலை கடிந்து கொள் நீ என்ன சொல்லுவாயோ அதன் படியாய் அது கீழ்படியுமென்று” சொன்னார். அதுதான் ஊழியத்தின் மூன்றாம் படியானது வந்து கொண்டிருக்கிறது நேரம் வருடங்களாக அது உயர்ந்து கொண்டே வருகிறது. ஏதோ காரியம் என்னை வருத்திக்கொண்டு இருந்தது போன்று காணப்பட்டதென்று நினைக்கிறேன். 36ஆனால் அவர் செய்தது சரியாக அப்படியே தான், அது மறுபடியுமாக அவர்தான் அது சரியாக அப்படியே அவருடைய ஆவி தான், சரியாக அப்படியே. ஆனால் என்னுடைய ஊழியத்திலும் அப்படியே அனேக மாம்சீக போலிகள் மற்றவர்கள் மேல் இருந்தது அதைக்குறித்து சிந்திப்பதே என்னை பயத்துக்குள்ளாகும். ஏனென்றால் உலகமானது இருப்பது எவ்வளவு நிச்சயமாய் உள்ளதோ அவ்வளவு நிச்சயமாக அப்படிப்பட்ட காரியங்கள் உங்களுக்கு இருக்கும், எப்பொழுதும் திரளான கருப்பு ஜனக்கூட்டம் இருக்கும். அப்படிப்பட்ட மாம்சீக போலிகள் தொடர்ந்து வரவேண்டும். அவருடைய நாட்களில் அது நடந்தது, மோசே நாட்களில் அது நடந்தது, ஒவ்வொரு நாளிலும் அது நடக்கும். பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்ய ஆரம்பிக்கும்போது, இந்த நாட்களில் அது அதை செய்யும், ஆனால் இருந்தபோதிலும் ஒரு மனிதன் ஆவிக்குரியவனாய் இருப்பானாயின், எவ்வளவுதான் மாம்சீக போலிகள் இருந்தாலும் சரியானதை மட்டுமே மிகைப்படுத்திக்காட்டும், உண்மையான தேவனுடைய காரியமானால் அது அப்படியாயிருக்கும். 37அந்த நேரத்தில் அங்கே நான் எழும்பி நின்றுகொண்டு; “கர்த்தராகிய தேவனே இயற்கையின் மகத்தான சிருஷ்டிகரே பேசுகிறது நீர் தான் என்று நான் விசுவாசிக்கிறேன். ஒருமுறைகூட தவறான ஒன்றை நீர் எனக்கு காட்டினது இல்லை, ஒருமுறைகூட என்னை சொல்லும் படியாய் அனுப்பிவைத்து சம்பவியாமல் போன காரியம் ஒன்றும் கிடையாதென்று” சொன்னேன். ஆகவே நான் பயங்கரமாய் வீசிக்கொண்டிருக்கின்ற இந்தப் புயலிடத்தில் நான் கூறினேன், “உன்னுடைய ஸ்தலத்திற்கு நீ போ இதை அப்படியே தனியாய் விட்டு திரும்பிப் போ இந்த ஜனங்கள் தங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டு இந்த மலைகளை விட்டு கடந்து போகவும் நான் அவர்களுக்கு இதில் உதவி செய்யும் படியாய் அடுத்த நான்கு மணி நேரம் வரைக்கும் சூரியன் பிரகாசிக்க வேண்டுமென்று நான் கட்டளையிடுகிறேன்” என்று சொன்னேன். தேவனாகிய கர்த்தர் தாமே என்னுடைய புனிதமான நியாயாதிபதியாய் இக்காலையில் இருக்கிறார், பலமாக அடித்துக் கொண்டிருந்த மழையும் பணியும் ஒரு நொடி பொழுதில் ஒன்றுமே இல்லாமல் போயிற்று, நான் நோக்கி பார்த்தேன்; வேறு வழியில் இருந்து காற்று வந்தது மலையின் மேலிருந்து வந்து இவ்விதமாக அந்த மேகங்களை உயரே தூக்கி கொண்டு போனது, ஒரு சில நிமிடங்களுக்குள்ளாக சூரியன் வெளிவந்தது உச்சியில் வந்து நேராக கீழே எவ்வளவு அழகாக பிரகாசிக்க கூடுமோ அவ்வளவு அழகாக பிரகாசித்தது. 38ஜெர்மனியில் செய்யப்பட்டதே அதே விதமாக அது செய்தது ஜெர்மனியில் இருந்த கதை உங்களுக்கு நினைவிருக்கிறதா? அப்பொழுது சுமார் 15 மந்திரவாதிகள் ஒரு பக்கமாக ஒரு கத்தியை எடுத்து ஒரு சிறகை வேட்டி அதை இந்தப் பக்கமாக குறிவைத்து அங்கே நின்று கொண்டு மந்திரம் ஓத தொடங்கினர்; “30 ஆயிரம் பேர்கள் அமர்ந்திருந்த அந்தக் கூடாரத்தை அப்படியே காற்று கிளித்தெரியும்படி செய்வோம்” என்றார்கள். சகோதரன் ஆர்கன் பிரைட் அங்கு நின்று கொண்டு இருக்கிறார், புயல் பயங்கரமாய் வந்தது மேகங்கள் நேராக அங்கேயே வந்தது, சகோதரன் லோஸ்டர் பக்கத்தில் நான் நின்று கொண்டு இருந்தேன், “உங்களில் அனேகருக்கு அவரைத் தெரியும் அமெரிக்காவில் பிறந்த ஜெர்மனியர் அவர்தான் அங்கே எனக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்தார்” அவர் அங்கே நின்று கொண்டு இருந்தார், நான் அவரிடம், “இதை மொழிபெயர்க்க வேண்டாமென்று” சொன்னேன். ஆனால் நான், “தேவனாகிய கர்த்தாவே நீர் எனக்கு ஒரு தரிசனத்தை கொடுத்து என்னை ஜெர்மனிக்கு அனுப்பிநீர் இந்த மந்திரவாதிகள் இந்தப் புயலை கொண்டு வந்தார்கள், சிருஷ்டிப்பின் தேவன் நீராய் இருக்கிறீர் நீரே தேவனென்று அறியும் படியாய் செய்யும்” என்றேன். ஆங்கிலம் அறிந்தவர்களை தவிர வேறு ஒருவருக்கும் இது தெரியாது அங்கே ஆங்கிலம் தெரிந்தவர் 12 பேர் இருப்பது அரிது, அந்த நேரத்தில் தானே 30 ஆயிரம் பேர்கள் உட்கார்ந்துள்ள அந்தக் கூடாரமானது இந்த விதமாக உள்ளே எழும்பினது மேலும் கீழுமாக குதித்துக் கொண்டு இருந்தது அது அப்படியே அடங்கியது மேகங்களும் இடி முழக்கங்களும் அப்படியே நின்று போயிற்று, ஐந்து நிமிடங்களுக்குள்ளாக சூரியன் பிரகாசிக்க துவங்கினது அப்படியே தொடர்ந்து இருந்தது கிட்டத்தட்ட 15 ஆயிரம் ஜெர்மானியர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் வந்தனர்; அவர் இன்னமும் தேவனாய் இருக்கிறார், அவர் எப்போதும் உள்ளது போலவே அவ்வளவாய் அவர் தேவனால் இருக்கிறார். 39அந்தக் குன்றின் மேல் நான் நின்று கொண்டு இருந்தேன்; நான்கு நாட்கள் கழித்து வெளியே வந்தோம் யாருக்காவது விஷயம் என்னவென்று தெரியுமா? அந்த மணி நேரத்திலிருந்து நான்கு நாட்களாக ஒரு மேகம் கூட ஆகாயத்தில் இல்லை, நாங்கள் மலைகள் விட்டு கீழே இறங்கி வந்து எங்கள் வண்டிகளுக்கு பெட்ரோல் போடுவதற்காக பெட்ரோல் நிலையங்களுக்கு வந்தோம். மிகவும் காய்ந்து போய் இருக்கிறது என்றேன். அவர்கள், “ஆம் காய்ந்து போய் தான் இருக்கிறது” என்றார்கள். அன்று, “புயல் வருமென்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம், புயல் வந்தது ஆனால் எங்களுக்கு தெரியவேயில்லை அது நின்று போய் விட்டதென்று” என்று சொன்னார்கள். புரிகின்றதா? நான் கொலராடோவில் அந்தப் பக்கத்துக்கு சென்று கொஞ்சம் வண்டிக்கு பெட்ரோல் வாங்க நின்றோம். பின்னால் நிற்கின்ற என்னுடைய மகன் நாங்கள் இருவருமாய் அங்கே இருந்தோம். இங்கே, “கீழேயும் புயல் நின்று விட்டதா என்று பார்ப்போமென்று” சொல்லி வண்டியை நிறுத்தினோம். நான் வண்டியை உள்ளே ஒட்டிக்கொண்டு போய், “காலை வணக்கமென்று” அந்த மனிதனிடம் பேச ஆரம்பித்தேன். அவன் “காலை வணக்கம்” என்றான். நான், “நிச்சயமாக ஒரு அழகான நாள் என்று” எண்ணினேன். அவர், “ஆம் பழைய சூரியன் திரும்பவுமாக வெளியே வருகிறது மீண்டும் உஷ்னம் இந்த வெயில் காலம் நிச்சயமாக சூரியன் நம்மை தீர்த்து விட்டது” என்று சொன்னான். நான், “ஆமாம், தேசம் முழுவதுமாய் அப்படியாய் இருந்தது” என்றேன். அவன், “ஆம், எனக்கு புரிகிறது” என்றான். நான், “உங்களுடைய புயல்களுக்கான நேரமானது ஏறக்குறைய வந்தாயிற்றென்று” சொன்னேன். அவன், “உனக்கு என்ன நடந்ததென்று தெரியுமா?” என்றான். அவன் கூறினான், “எல்லா பத்திரிக்கைகளும் வானொலியும் எல்லாவற்றிலும் அன்று புயல் வருகிறதென்று அறிவிக்கப்பட்டது மேகங்கள் வந்தது புயல் ஆரம்பமாகிவிட்டது பிறகு என்ன நடந்ததென்று எங்களுக்குத் தெரியாது உடனடியாக அவைகள் எல்லாம் போய் விட்டதென்று” சொன்னான். 40அவர் இன்னமும் தேவனாக இருக்கிறார்; அவர் எப்பொழுதும் உள்ளது போலவே அவ்வளவு தேவனாக இருக்கிறார், ஆனால் தேவன் முதலாவது அப்படி சொல்லும்படி அவரிடம் சொல்லாமல் ஒரு மனிதன் எப்படி அப்படிப்பட்ட காரியங்களைச் சொல்ல முடியும். பாருங்கள். அப்படியாக எண்ணம் கொண்டு சொல்லுவதல்ல ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை அறிந்திருங்கள், பின்னர் அதை செய்யுங்கள், ஆனால் பொருள்கள் சொல்லு முயற்சிக்காதீர்கள், ஓ அந்த விதமாகத்தான் நான் நினைக்கிறேன். அனேக ஜனங்கள் தேவனுடைய வரங்களை பற்றி அதை அறிந்து கொள்ளும் படியாய் காத்திருங்கள், அது தேவனென்று உங்களுக்கு தெரியும். பாருங்கள். சத்தம் வரும்மட்டாய் காத்திருங்கள், பின்னர் அதை செவியினால் கேளுங்கள் அதை அறிந்து கொள்ளுங்கள், அதை காணுங்கள் அப்பொழுது நீங்கள் சொல்லலாம் இது கர்த்தர் சொல்லுகிறதாக இருக்கிறதென்று, அது கர்த்தர் சொல்லுகிறதாய் இல்லை என்றால் அப்பொழுது அது உங்கள் என்னமாய் இருக்கும் அதுதான் வேறு யாரோ சிந்திப்பதாயிருக்கும். ஜனங்கள் இதை எனக்காக சொல்லுங்கள், இதை எனக்காக செய்யுங்கள், என்று கேட்டுக் கொள்கிறார்கள். நீங்கள் தேவனோடு நேர்மையாய் இருப்பீர்களானால், தேவன் அதை உங்களிடம் சொல்லாமல் உங்களால் எப்படி அதை சொல்ல முடியும்? சகோ ஜாக் மூர் என்னிடம் ஒன்றையும் சொல்லாமல் நான் எப்படி உங்களிடம் ஜாக் மூர் இன்ன விதமாய் சொல்லுகிறாரென்று சொல்ல முடியும்? அது என்னத்தில் தோன்றுவதல்ல அது முதலாவதாக தேவனிடத்திலிருந்து வந்தாக வேண்டும். அது தேவனாய் இருக்க வேண்டும். அப்பொழுது அது சம்பவிக்கும் அப்பொழுது அது கர்த்தர் சொல்லுகிறதாய் இருக்கும். 41இப்பொழுது எல்லாரும் அதை உடையவர்களாய் இருக்க மாட்டார்கள், இல்லை ஐயா. அது அந்த வண்ணமாய் இருக்காது அது ஒரு போதும் அந்த விதமாய் இருந்ததில்லை ஒரு போதும் அந்த விதமாய் இருக்கப் போவதுமில்லை. தேவன் தனிப்பட்ட ஒரு நபரிடத்தில் இடைப்படுகிறார் அவர் அதை நோவாவின் நாட்களில் செய்தார், அவர் இயேசுவின் நாட்களில் அதைச் செய்தார் மோசே நாட்களில் அதைச் செய்தார் அவர் எப்பொழுதும் அவ்வாறேச் செய்தார். அவர் ஒரு போதும் ஒரு அமைப்பை உண்டு பண்ணவில்லை; அது ஒரு தனிப்பட்ட நபராய் தான் இருந்தது, ஏனென்றால் எந்த நேரத்திலும் இரண்டு பேர் ஒரே விதமாய் இருந்ததில்லை, பாருங்கள். அவர் ஒரு போதும் செய்யவே இல்லை, ஆனால் எல்லாரும் மோசேயாய் இருக்க வேண்டியதில்லை, அவர்கள் அதை புரிந்து கொள்வதில்லை, அவர்கள் அதை பின்பற்ற மாத்திரம் செய்தார்கள். ஒரு மனிதன் அபிஷேகிக்கப் பட்டிருப்பானேயானால் பரிசுத்த ஆவியானவர் உன்னை பரிசுத்த ஆவியையும் வேதத்தையும் பின்பற்றி போக உன்னை நடத்துவார். ஏனென்றால், காரியங்கள் எல்லாவற்றையும் செய்பவர் அவர் ஒருவரே, இயேசு கிறிஸ்துவானவர் பரிசுத்த ஆவியின் வடிவிலே ஜனங்களுக்கு உள்ளாக கிரியை செய்கின்றார். 42நான் அங்கே நின்று கொண்டு கீழே நோக்கி நடக்கத் துவங்கினேன், நான் அங்கேயே நின்றேன். நான் அழுதேன் எனக்கு வேற வழியே இல்லை, ஒரு நொடி பொழுதில் சரியாக அங்கே நடந்த சம்பவத்தை கண்டபடியினால் அப்படி செய்தேன். அங்கே மலையின் மேல் இருந்தவர்களில் யாராவது இங்கு இருக்கின்றீர்களா? ஃப்ரெட் சோத்மன் மற்றவர்கள் இருக்கிறார்கள் என்று நான் அறிவேன். அவர்கள் மலையின் மேல் இருந்தார்கள், இல்லை ஃப்ரெட் அடுத்த இடத்தில் என்னோடு இருந்தார், அங்கே மலையில் இருந்தவர்களிள் யாராவது எங்கு இருக்கின்றீர்களா? சகோதரன் பேங்க்ஸ் வூடும் மற்றவர்களும், இன்னும் உள்ளே வரவில்லையா? பில்லி பாலை தவிர வேறு யாராவது அங்கிருந்தவர்கள் யாரேனும் இங்கில்லையா? இந்தப் பையன்கள் இப்பொழுதுதான் போனார்கள், ஆம் சகோதரன் வூட்டும் சகோதரன் டெய்லர், அந்த சகோதரன் பெயர் எனக்கு மறந்து போயிற்று நான்கு அல்லது ஐந்து பேர் அங்கேயே நின்று கொண்டு இருந்தார்கள். இங்கே இருக்கின்ற சகோதரர்கள் சகோதரன் மார்ட்டின், முந்தைய நாள்தான் புயல் வருகிறதென்று போய்விட்டனர். உங்களுக்கு எல்லாம் நினைவிருக்கிறதா? அந்தப் புயல் வருமென்று அந்த வானொலி அறிவிப்பு சொன்னது, [ஒரு சகோதரர், “நாங்கள் அதைச் சந்தித்தோம்” என்று கூறுகிறார். ஆசி.] என்ன சொல்லுகிறீர்கள்? நீங்கள் அதை சந்தித்தீர்களா? 43பின்னர் இப்பொழுது கவனியுங்கள் அங்கே நின்றுகொண்டு “சரி, நான் மலையின் கீழே போகமுடியுமென்று என்னினேன்.” மேலும், சில வருடங்களுக்கு முன்பு நான் முழு சுவிசேஷ வியாபார புருஷர்களோடு வெளியே போகும்போது, வேறு யாருக்கும் வேட்டையாடி நான் எதையும் கொடுக்க மாட்டேன் என்றும் அவசர நிலை ஏற்பட்டால் ஒழிய சுடமாட்டேனென்றும் சில வருடங்களுக்கு முன்பாக தேவனிடத்தில் ஒரு பொருத்தனையை பண்ணிக்கொண்டேன், அதனால் நான் அப்படி செய்ய மாட்டேன். மற்றும், ஆம் அது சகோதரன் ஜாக் பால்மர், இங்கு இருக்கின்றாரா? சகோதரர் ஜாக் அவர் ஜார்ஜியாவில் இருந்து வந்தவர் அவர் வழக்கமாக இங்கு வருவார், அவர் அங்கே நின்றுகொண்டு இருந்தார் அவர் அதற்கு முந்தின இரவு அவர், “சகோதரன் பிரான்ஹாம் எனக்கு ஒரு மான் கொண்டு வாருமென்று” சொன்னார், நான், “தலையை அசைத்தேன்”, 44ஏனென்றால், நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு முன்னர் நான் அவ்விதம் செய்ய மாட்டேனென்று பொருத்தனை பண்ணியிருந்தேன். ஏனென்றால் அந்த வருடம் நான் 19 மான்களை சுட்டுக் கொன்றேன். உட்கார்ந்துகொண்டு வியாபாரம் செய்கின்ற வியாபாரிகளுக்கு நான் போய் வேட்டையாடிக் கொண்டு வரவேண்டும். எனக்கு அது சரியாக தோன்றவில்லை, என்னை ஏதோ கொலைக்கார பட்டியலில் வைப்பது போன்று, ஆனால் நான் அதை செய்ய மாட்டேன். அது எங்கு இருக்கின்றதோ அங்கு அவர்களை கூட்டிக்கொண்டு போவேன், ஆனால் நான் அதை சுட மாட்டேன், ஆகவே நான் அதை செய்ய மாட்டேன் என்னும் தேவனிடம் வாக்களித்து இருந்தேன். ஆக அதன் பிறகு நான் எழுத்து அந்த இடத்தை விட்டு திரும்பி போனேன், மலையின் அடிவாரம் நோக்கி போக ஆரம்பித்தேன். ஒரு சத்தம் என்னோடு பேசி: “ஏன் என்னோடு கூட நீ நடக்க கூடாது?” என்று சொல்லக்கேட்டேன். நான் அதற்கு; “தேவனாகிய கர்த்தாவே இது நிராயிருப்பீரானால் மேகங்களை பகுத்தனெப்பி நீர் என்ன செய்தீரோ அது உம்முடைய கரம் மட்டும் தான் அதை செய்ய முடியுமென்று நான் அதை அறிவேன்” என்று சொன்னேன். மிதமான உஷ்ண சூரியன் பிரகாசித்து என்னுடைய சட்டை காய்ந்து அதிலிருந்து நீராவி வெளிவருகிறது, ஒரு பெரிய ஆலயம் கன்னிகாடு உங்களுக்கு தெரியும், நான் சொன்னேன், “அப்படியானால் நான் இந்த வழியாய் நடப்பேனென்று நம்புகிறேன் ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட திசை என்று உமக்கு இல்லை, நான் அங்கே மேலே போய் ஒரு நிமிடங்கள் அங்கே என் மனைவியின் ஞாபகார்த்தமாய் நின்றுவிட்டு வரவேண்டுமென்று உள்ளேன் உமக்கு தெரியும் அதுதான் எங்கள் முதல் தேனிலவு அதற்குப் பின்னர் அப்படி ஒன்றுக்கு எங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை” என்றேன். நான் அவளை ஒரு வேட்டை பிரயானமாய் கொண்டு போனேன், அங்கே மறுபடியுமாய் இந்த வருடம் இந்த சகோதரர்களோடு கூட வந்திருக்கிறேன்; அங்கே கீழே டூசானில் காரியங்களை கவனித்துக்கொண்டு இருக்கிறாள்“ என்று சொன்னேன். 45நான் அவளிடம் மட்டும் நடந்து செல்ல துவங்கினேன், அப்படியே சிந்திக்கலானான் இப்பொழுது இது வினோதமாக காணப்பட போகிறது நான் துரிதமாய் சொல்லுகின்றேன். ஏனென்றால் இன்னும் பத்து நிமிடங்களில் உங்களுடைய ஆராதனை துவங்கப்போகிறது என்று அறிவேன். நான் அப்படியாய் நடந்தது கொண்டே போய் இவ்விதமாய் யோசித்துக்கொண்டிருந்தேன். எங்கேயாவது போகலாமென்று ஏன் அவள் ஒரு வார்த்தையும் கூட சொல்லவே இல்லை? இந்த காலையில் என்ன சம்பவித்தது என்பதை உங்களுடன் சில நிமிடங்களில் கூற விரும்புகிறேன். ஒவ்வொரு மனிதனும் இதைக்குறித்து சந்திக்க வேண்டும். என்னுடைய மனைவியை போன்ற ஒரு பெண் உலகத்திலேயே இருக்க மாட்டாள் என்று நினைக்கிறேன், மிகவும் அருமையான சிறிது பயபக்திள்ளவளும் வீட்டிலே தரித்திருப்பவருமான ஒரு நபர், என்னுடைய துணிகளை எல்லாம் எப்பொழுதும் ஆயத்தமாக வைத்திருப்பாள், நான் வெளியே பிரயாணமாய் போய் திரும்பிவந்து, “நான் உன்னுடைய புருஷன் நீ என்னுடைய மனைவியா?” என்று சொல்லி அவளை சற்று வெறுப்புட்டுவேன், அந்த விதமாக சொல்லி பின்னர் பிள்ளைகளை முத்தமிட்டு முழங்கால் படியிட்டு ஜெபம் செய்வோம். ஜனக்கூட்டம் மற்ற காரியங்களிலிருந்து என் சிந்தையை சமாதானப் படுத்திக் கொள்ள மாற்று உடை அணிந்து கொண்டு அவளை விட்டு தூரப் போய் மீன் பிடிக்கச் சென்று விடுவேன், அவள் அவை எல்லாவற்றையும் அவளாகவே தனியாக தாங்கிக்கொள்ள வேண்டியவளாய் இருந்தாள். 46பின்னர் நான் இவ்விதமாய் யோசிப்பேன், அதாவது நான் வீட்டில் இருக்கும்போது எனக்குத் தெரிந்தது எல்லாம் ஒரே ஒரு காரியம் தான் தேவனும் தேவனுடைய வார்த்தையும் தான், நான் தொடர்ந்து அதன் பேரிலேயே பேசி கொண்டு இருக்கிறேன். நான் அங்கே போய் கொண்டே இருந்தேன். அங்கே எனக்கு ஒரு கருத்து அளிக்கப்பட்டது. அதாவது ஒரு கால் அவ்விதமாகவே சம்பவிக்க அனுமதிக்கலாம், ஏனென்றால் அந்த ஜனங்களை தூரமாய் நிறுத்தும் அதுபோன்று இருக்கலாம், நீ தூர விலகி இருக்கும் போது அவள் சற்று சமாதானமாய் இருக்கக்கூடும் என்பதுபோல் தோன்றுகிறது, நான் அந்த எண்ணத்துடனே போய் கொண்டு இருந்தேன். ஊம் என்று சொல்லி கொண்டே போனேன் கிருதாமுடி வளர்ந்து முகத்தில் தொங்கிக்கொண்டிருந்தது, பாதிக்குமேல் நிறைந்துவிட்டது. பில், “நீ இப்பொழுதே எங்கே போய்க் கொண்டு இருக்கிறாய் என்று தெரியுமா? உனக்கு வயதாகிக் கொண்டே முதுமைக்கு நேராக போகின்றாய் 50 என்ற ஒரு குறியீட்டை நீ ஏற்கனவே கடந்து விட்டாயென்று” நான் எண்ணினேன். ஆகவே என்னுடைய துப்பாக்கி தோலின் மேல் தொங்கி கொண்டிருக்க நான் அப்படியாய் நடந்து போய்க் கொண்டே அதை யோசித்து கொண்டு இருந்தேன். 47திடீரென்று ஏதோ காரியம் சம்பவித்தது; எல்லா அம்சத்திலும் நான் ஒரு பையனாக ஆவது போன்று காணப்பட்டது; என்னுடைய மூளையில் அப்படி ஏதாவது ஏற்பட்டதோ அல்லது அது என்னவென்றோ எனக்கு தெரியவில்லை, நான் நோக்கி பார்த்தேன்; அவளுக்கு முன்பாக நின்று கொண்டு நேராக அங்கே எனக்கு முன்பாகவே திருமணமான போது எப்படி இருந்தளோ அந்த வண்ணமாகவே அவள் அங்கு நின்று கொண்டு இருந்தாள்; நான் என் துப்பாக்கியை கீழே வைத்துவிட்டு என் கண்களை கசக்கினேன்; நான் அவளை நோக்கி பார்த்தேன்: அவள் இந்த வண்ணமாகவே தன் கரங்களை நீட்டிக்கொண்டு என்னை நோக்கிப் பார்த்தாள்; நான் என் தலையை தொங்கப் போட்டேன். ஏனென்றால், நான் எங்களுடைய திருமண நாளை நினைவு கூடுதலாய் அவ்விடம் நோக்கி நான் போய்க் கொண்டிருந்தேன், நாங்கள் அடிரோண்டாக் மேலே போய்க்கொண்டிருந்தபோது அங்கே வடக்கு காடுகளில் இருந்தது போன்று சிறிய ஆஸ்ப்ஸை கூட்டமாய் இருக்க அந்த மரங்களின் (ஆஸ்ப்ஸை Asps ஒரு வகை மரம்) அங்கே நிற்கும் படியாய் பொய் கொண்டிருந்தேன். ஒவ்வொரு அக்டோபர் மாதம் 23ம் தேதி அன்று அங்கே மேலே இருப்பேன் நான் எப்பொழுதும் அங்கே போவேன். 48அவள் அங்கே இருந்தாள், நான் என் துப்பாக்கியை அங்கே கீழே வைத்துவிட்டு அங்கே பார்த்தேன்; ஒரு நிமிடம் அப்படியே நின்று என் தலையை வணங்கினேன்: நான் திரும்பி பார்த்தேன் அவள் இன்னமும் அவள் கைகளை நீட்டியவாறு அங்கே நின்று கொண்டு இருந்தாள். எனக்கு ஒன்றும் பைத்தியம் பிடிக்கவில்லையே என்று எண்ணினேன், நான் மறுபடியுமாய் நோக்கி பார்த்தேன்: இப்படியே நீர் இருக்க வேண்டுமென்று எண்ணினேன். அங்கே நான் ஒரு வாலிபனாய் நின்று கொண்டு இருக்கிறேன், என் கரங்களை பார்த்துவிட்டு இந்த விதமாக சொன்னேன், “கர்த்தாவே உலகத்தில் உன்னுடைய செய்தியை கொண்டுவருவதுதான் என்னுடைய உத்தரவாதமாய் இருக்கிறது ஆனால் நிச்சயமாக இந்தக் காரியம் சம்பவித்தது” என்றேன். நான் மறுபடியும் நோக்கி பார்த்தேன்: அப்பொழுது அது அப்படியே மங்கி மறைந்து போயிற்று, நான் என் துப்பாக்கியை கீழே இருந்து எடுத்து என் தோளின் மேல் மாட்டிக்கொண்டேன், நான் இப்படி வந்தவுடன் இப்படி வேட்டை மற்ற காரியங்களுக்கு வருவது ஒருகால் அவளுடைய இருதயத்தை கிளிக்கின்றது, என்ற காரணத்தை நான் அறியும்படி நீர் செய்கிரி என்றேன். 49ஆனால் நான் தொடர்ந்து நடந்து போய்க் கொண்டிருக்கும் போது தலையிலிருந்த என் தொப்பியை கழற்றி விட்டேன், நான் சொன்னேன், “தேவனே நீர் இங்கே இருக்கிறீர் என்று நான் அறிவேன் அது என் சிந்தையில் சிறிதேனும் சந்தேகமே இல்லை நீர் இங்கு தான் இருக்கிறீர்” நான் உண்மை விசுவாசிக்கிறேன் ஒவ்வொரு வார்த்தையும் விசுவாசிக்கிறேன், அந்த சூரியன் என் முதுகின் மேல் பிரகாசிக்கும் படியாய் செய்தது நீர் நீரே தான், இந்தக் காரியங்கள் எல்லாவற்றையும் செய்வது நீர் ஒருவர்தான் நீர் ஒருவரே சிருஷ்டி கர்த்தாவாய் இருக்கிறீர். நான் அவ்வளவு தாமதமாய் இருக்கிறேன், பற்றிப் பிடிக்க பயப்படுகிறவன் போல் காணப்படுகின்றது நான் ஏதாவது தவறு செய்து விடுவேனோவென்று பயப்படுகிறேன், ஒரு காரியத்தை நீர் செய்யும் படியாய் நான் கேட்கிறேன் பாரத்தை என் இருதயத்தில் இருந்து நீக்கிவிடும். மீண்டும் அறிக்கை செய்ய முயற்சிப்பது இனி அவசியமில்லை, ஏனென்றால் நான் தொடர்ந்து ஐந்து வருடங்களாக உம்மிடம் கதறிக்கொண்டு இருக்கிறேன். நான் என்ன காரியம் செய்தேன் அது என்னவென்று எனக்கு சொல்லுமென்று நான் சொன்னேன். 50அந்த நேரத்தில் நான் ஒரு குன்றின் மீது ஏறிப்போய் கொண்டிருந்தேன், அதாவது சரியாக எங்கே நான் சில நிமிடங்கள் நிற்க வேண்டுமென்றிருந்தேனோ அதற்கு அருகாமையில் அங்கே என்னுடைய மனைவிக்காகவும் எனக்கு தேவன் தந்த வெற்றிகரமான திருமணத்திற்காகவும், இத்தனை வருஷங்களாக ஒருவரிலொருவர் எங்களுக்கு உண்டாயிருந்த அன்பிற்காகவும், பிள்ளைகளுக்காகவும் நன்றி கூறும் படியாய் போய் கொண்டிருந்தேன். ஒவ்வொரு அக்டோபர் 23ம் தேதியும் நான் அதை செய்வேன். பத்து அங்குல அடர்த்தியாய் அங்கே ஆஸ்ப் செடி இருந்தது இந்தவிதம் வளர்ந்து “L” எழுத்து வடிவாய் மேல் நோக்கி போய் கொண்டிருந்தது, நான் அப்படியாக குன்றின் மீது நடந்துகொண்டிருந்தபோது நான் பெலவீனமானேன், நான் அப்படியே மரத்தின் மீது இந்த விதமாய் சற்று சாய்ந்து கொண்டேன். ஏதோ இலைகளின் மீது பட் பட் என்று விழும் ஓசை எனக்கு கேட்டது, ஒரு நிமிடம்; அந்த நேரத்தில் இவைகள் எல்லாம் நன்றாய் உலர்ந்து விட்டது சுமார் 300 அல்லது 400 கெஜ தூரம் (ஒரு கெஜம் என்பது இரண்டு முழ அளவு) அப்படி காய்ந்து விட்டது, நான் நோக்கி பார்த்தேன் அது என் கண்களில் இருந்து விழுந்து கண்ணிர் விழுந்து தாடியில் ஓடி தரையில் இலைகளில் விழுகிறது, நான் சொன்னேன், “ஓ தேவனே நான் என்ன ஒரு தோல்வியானேன்” என்று. அந்த நிலைமையில் நின்று கொண்டு நீர் அவள் மேல் இரக்கமாய் இருப்பீரென்று நான் நம்புகிறேன், கிருபையை கேட்க நான் தகுதியற்றவன், எனக்கு நரைத்துக் கொண்டே போகிறது, என்றோ ஒரு நாள் கர்த்தாவே நான் போகத்தான் வேண்டுமென்று நான் சொன்னேன். 51அது பைத்தியமென்று ஜனங்கள் எண்ணலாம் என்று நான் யூகிக்கிறேன், ஆனால் அப்படியான வெளிப்புறங்களில் நான் தேவனை காண்கிறேன் அப்படிப்பட்ட இடங்களில்தான் அது மிகவும் எனக்கு உண்மைப் பொருளாக இருக்கிறது, இங்கே இருக்கின்ற விதமாகவே அங்கே அவ்வளவு உண்மையாக இருக்கிறது, வெளிப்படையாக சொன்னால் இதை காட்டிலும் அதிகமாக இருக்கிறது, ஏனென்றால் இங்கே நீங்கள் யாவரும் ஒரு பாகமாகுகிறீகள், அங்கேயோ நான் மட்டும் தனிமையாக நின்று கொண்டிருக்கிறதாக காணப்படுகிறது, மற்ற ஒருவரிடமும் இல்லாமல் அவரிடம் மட்டுமே பேசுகின்றதாக இருக்கின்றது. அங்கே நான் நின்றவாறு இருக்க புதர் விலகுவது போன்ற ஒரு சத்தம் கேட்டு ஒருவிதமாக நான் தலை நிமிர்ந்து பார்த்தேன் அப்பொழுது நான் ஒரு சிகப்பு சட்டை அனிந்தவனாக என்னுடைய தொப்பி ஒரு சிகப்பு நாடா பட்டை சுற்றப்பட்டிருந்தது, வடக்கத்திய வழக்கம் போன்று அதன்மீது ஒரு சிகப்பு கைகுட்டை சுற்றப்பட்டதாக இருந்தது. நான் நோக்கி பார்த்தேன், என் பக்கத்தில் மூன்று மான்கள் நின்று கொண்டு இருந்தன நேராக என் அண்டை நடந்து வந்தது, அப்பொழுது நான் எல்லாம் சிகப்பு மயமாக இருந்தேன் அங்கே துப்பாக்கி சூடு நடக்கின்றது சுமார் நூறு பெயர்கள் 40 முறையாக சுட்டனர் என்று நினைக்கிறேன். பார்க்கப்போனால் இவ்வளவிற்கும் அவைகள் கலைந்து ஓடி இருக்க வேண்டும், ஆனால் அவைகள் அப்படி ஓடவில்லை அவைகள் அப்படியே நின்றுகொண்டு என்னை நோக்கி பார்த்துக்கொண்டு இருந்தது. 52அருமையான மாமிசம் நன்றாய் முழுவதுமாக வளர்ந்த இரு மான் குட்டிகளும், ஒரு தாய் மானும், ஏதோ ஒன்று என்னிடத்தில் அதோ சகோதரர் எவன்ஸுக்கு அங்கே ஒரு மான் இருக்கின்றது, ஒன்று சகோதரன் வெஸ்லிக்கும் ஒன்று மெத்தடிஸ்ட் பிரசங்கி யாருக்குமாக இருக்கின்றது, தேவனாகிய கர்த்தர் தாமே அதை உனக்கு சரியாக அப்படியே கொடுத்திருக்கிறார் அவைகளால் தப்பிப் போக முடியாது, அவைகளுக்கு வேற வழியே இல்லை என்று என்னிடம் சொன்னது, “துப்பாக்கியோ என் தோள் மீது தான் தொங்கிக் கொண்டு இருந்தது” அவைகள் லேசாக அப்படித் திரும்புவதற்குள் என்னால் அவைகள் மூன்றையும் சுட்டு விட முடியும், அதாவது அவைகள் ஆசைவதற்குள்ளாகவே என்னால் சுட்டு விட முடியும், அவைகள் என் கைக்குள்ளாகவே இருந்தது, அவைகள் அங்கு மூன்று இருந்தன அவைகளை அங்கிருந்து சுலபமாய் அடிவாரத்திற்கு உருட்டிவிட முடியும், பின்னர் அவைகளை வெளியே கொண்டு வரலாம் என்று எண்ணினேன். அது மிகவும் இலகுவாக இருக்கும் அங்கே மூன்று இருக்கின்றன, ஆனால் நாங்கள் அங்கிருந்தே அவைகளை வெளியே எடுத்து மலைகளை விட்டு வீட்டுக்கு போகலாம் என்று எண்ணினேன். நான் அவைகளை அங்கே நோக்கி பார்த்துக் கொண்டிருக்க அவைகள் அங்கே நின்று கொண்டு என்னை நோக்கி பார்த்து கொண்டிருக்கிறது, ஒரு பதினைந்து அல்லது 20 கெஜ தூரத்தில் நின்று கொண்டு அசையாமல் இருந்தது, நான் அசையாமல் நின்று கொண்டிருந்தேன். 53நீங்கள் மானை வேட்டையாடி இருக்கிறீர்களோ இல்லையோ எனக்கு தெரியாது, ஆனால் அவைகள் வினோதமான வகைகள் அவைகளுக்கு நிச்சயம் இல்லை என்றால் அவைகளுடைய கால்களை இவ்விதமாய் பொருத்தி அதன் கால்களை தயார் நிலையில் வைத்துக்கொண்டு தன் நிலையை லேசாக மாற்றி அமைக்கும் அவைகளோ அப்படி ஒன்றும் செய்யவில்லை. பின்னர் அவைகள் என்னைப் பார்த்தன. நான் நினைத்தேன், “சரி அங்கேயே தான் இருக்கின்றது ஒரே ஒரு காரியம் தான் என்னுடைய துப்பாக்கியை அப்படி அசைத்தாலே அவ்வளவுதான் அவைகள் ஓடிப் போய்விடும்” என்று. அப்பொழுது நான் தேவனிடம் அப்படி செய்யமாட்டேன் என்று வாக்களித்தது எனக்கு ஞாபகம் வந்தது நான் அதை நினைவு கூர்ந்தேன்; இல்லை என்னால் அதை செய்ய முடியாது அது சரியானதல்ல நான் அதை செய்ய மாட்டேன் என்று தேவனிடம் வாக்கு அளித்துள்ளேன் என்று எண்ணினேன். நீங்கள் ஒரு வாக்களிக்கும்போது அதை காப்பாற்றுங்கள், நீங்கள் அப்படி செய்ய வேண்டுமென்று தேவன் எதிர்பார்க்கிறார். தப்பமுடியாமல் என் கரத்தில் இருக்கின்றன, ஆனால் இருந்தபோதிலும் நான் அதை செய்ய மாட்டேன் என்று அவரிடம் வாக்களித்துள்ளேன் என்று அங்கே நான் எண்ணினேன். 54நான் அந்த மானிடம், “தாயே நீ போகலாம் உன்னுடைய குழந்தைகளை கூட்டிக்கொண்டு காட்டிற்குள் போய் அனுபவி எனக்கும் கூட காடு பிடிக்கும், நீ என்னுடைய கரத்தில் இருக்கின்றாய், ஆனால் நான் உன்னை கொல்லப் போவது இல்லை” அவைகள் இன்னும் நெருக்கமாக வந்தது மான்களுக்கு இப்படி நடந்து கொள்வது வழக்கத்துக்கு மாறானது, உங்களுக்கு தெரியுமா? அவைகள் என்னை நோக்கி பார்த்துவிட்டு தலையை திருப்பிக்கொள்ளும். நான் அங்கே சிகப்பு உடையை அணிந்தவனாய் கரத்தில் துப்பாக்கியை உடையவனாக நின்று கொண்டிருந்தேன். நான் என் கைகளினால் அவைகளுக்கு ஆகாரத்தை ஊட்டும் அளவிற்கு அவ்வளவு நெருக்கமாக வந்து விட்டது, அவைகள் அங்கே சுற்றி நிமிர்ந்தது ஒரு சில வினாடிகள் ஒரு சுற்று சுற்றி கொஞ்சம் பின்னாக நடந்தது நின்று பின்பு மறுபடியும் திரும்பி வந்தது. எனக்கு உள்ளாக ஏதோ இவ்விதமாய் சொல்லிக்கொண்டு இருந்தது, “சரியாக அவைகள் உன் கரத்தில் இருக்கின்றன அவைகள் சரியாக உன் கரத்தில் இருக்கின்றது கர்த்தர் உன் கரத்திலே அவைகளை கொடுத்திருக்கிறார்” என்று. நான், “ஆனால் நான் வாக்களித்துள்ளேன்; அவ்விதம் செய்ய மாட்டேன் என்று வாக்களித்துள்ளேன்” என்று சொன்னேன். 55அப்பொழுது நான்; அங்கே நினைத்தேன் உனக்கு தெரியுமா? தாவீது, “ஒருசமயம் சவுல் ராஜா இருந்த பக்கமாக வழிநடத்தப்பட்டான், அப்பொழுது யோவாப் கர்த்தர் உம்முடைய கரத்தில் அவனை ஒப்புக் கொடுத்திருக்கிறார்” என்று சொன்னான். ஆனால் அவன் (தாவீது) அவர் அபிஷேகம் பண்ணினவர் மேல் என் கையை போடாத படி தேவன் என்னை காத்துக் கொள்வாராக என்று சொன்னான். புரிகின்றதா? பாருங்கள். நீங்கள் ஒரு வாக்கு பண்ணும்போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். பின்னர் நான் அதை சுட மாட்டேன் என்று “தேவனிடத்தில் வாக்களித்திள்ளேன் ஆகவே நான் சுட மாட்டேன்” என்று சொன்னேன். நான் சொன்னேன், “தாயே உன் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு காட்டிற்குள் போ நான் உன்னை தொந்தரவு செய்யப்போவதில்லை நீ என்னுடைய கரத்தில் இருக்கின்றாய் நீ முயற்சி செய்தாலும் என் கருத்தில் இருந்து தப்பிப் போக முடியாது. ஆனால் நான் உன்னை காயப்படுத்த போவதில்லை நீ காட்டிற்குள் போ” என்று சொன்னேன். அவைகள் மறுபடியுமாக ஒரு சுற்று சுற்றி அங்கே திரும்பி வந்தது. நான் அங்கேயே நின்றேன். இது என்னவாக இருக்கும், ஒரு வினோதமான காரியமாய் இருக்கின்றது என்று நினைத்தேன். 56நான் இயற்கையை விரும்புகின்ற ஒரு மனிதன் நான் இயற்கையில் தேவனை காண்கிறேன். சூரியன் அஸ்தமனமும் உதயமும் அது மரணம் அடக்கம் மீண்டும் உயிர்த்தெழுதலாக இருக்கின்றது. இயற்கையில் எல்லா காரியங்களும் அப்படிதான். மரங்களை போன்று பாதாளத்தில் மறைந்து கொள்வதை குறித்து யோபு எப்படி சொன்னான் என்னை அவர் ஒரு புனிதமான இடத்தில் மறைத்து வைப்பார் என்று, பாருங்கள். மரத்தின் ஜீவன் அதனை விட்டு இறங்கி பாதாளத்தின் மேல் இடத்திற்கு போய் வசந்த காலத்தில் மறுபடியுமாக உயிர்த்தெழுதலை போன்று வந்துவிடுகிறது, எல்லா காரியங்களும் ஜீவனையும் உயிர்த்தெழுதலையும் குறித்து பேசுகின்றது. 57நான் அவைகளை கவனித்துக்கொண்டு அங்கே நின்றவாறு இருக்க அவைகள் இன்னமும் நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருந்தது. பின்னர் அவைகள் திரும்பி காட்டிற்குள்ளாக நடந்து போய்விட்டன, நான் அப்படியே அசந்து போனவனாக இங்கே நின்று கொண்டிருந்தேன். அவைகள் அங்கிருந்து போன போது சூரியன் உதயம் என் முதுகின் மேல் பிரகாசித்து கொண்டிருந்தது அப்பொழுது அந்த சத்தமானது மீண்டும் என்னிடத்தில்: “நீ வாக்களித்ததை நினைவு கூர்ந்தாய் அல்லவா? என்று பேசினது”. நான், “ஆம் கர்த்தாவே; நான் வாக்களித்ததை நினைவு கூர்ந்தேன், அது நீர் தான் என்று நான் அறிவேன்; என்னால் உம்மை பார்க்க முடியாது கர்த்தாவே, ஆனால் நீர் இங்கு எங்கேயோ இருக்கிறீர்; நான் உம்மை காண முடியவில்லை ஆனால் நானோ உம்முடைய சத்தத்தைக் கேட்கிறேன்; நீர் இங்கு இருக்கிறீர்; என்று நான் அறிவேன்” என்று சொன்னேன். அவர்: “நீ உன்னுடைய வாக்குறுதியை காத்துக் கொண்டாய்; நீ உன்னுடைய வாக்குறுதியை நினைவுகூர்ந்தாய்; என்னுடைய வாக்குறுதியையும் கூட நான் நினைவு கூறுவேன்; நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை” என்று சொன்னார். ஓ என்னே, அதற்குப் பின்னர் அப்படியானதொரு உணர்வை நான் இன்னமும் பெறவில்லை, நான் மலையை விட்டு வந்தேன் அந்தப் பிற்பகல் முழுவதுமாக தரிசனத்தின் மேல் தரிசனமாக வந்தது, சம்பவித்தது. நான் கீழே இறங்கி வந்தேன், அதன் பின்னர் எல்லா காரியங்களுமே வித்தியாசமாக காணப்பட்டது பாரமானது என்னை விட்டு அகன்றுவிட்டது. ஜனங்கள் என் கையை தொடுவதினால் அவை என்னவென்று கண்டு கொண்டேனே. 58அந்த ஊழியம் முதலாவதாக அப்பொழுது தான் வந்தது அது அவருக்குளிருந்த ஜீவன், நமக்குத் தெரியும் அது எப்படி நடந்தது என்று. ஒரு இரவு கலிபோர்னியாவில் நான் சகோ மாலிகின் குடும்பத்தோடு உட்கார்ந்துகொண்டு இருந்தேன், சகோதரர் மூருக்கு, நினைவிருக்கும் சகோதரன் பிரவுன்-மாலிகின் குடும்பத்துன். பிரசவமானதிலிருந்து அந்த சிறு ஸ்தீரிக்கு மில்க் லைன் (milk leg) என்ற வியாதியை பெற்றுக்கொள்ள போகிறாள், என் கையின் மேல் அவள் கையை வைக்க சொல்லி “அதோ அங்கு இருக்கின்றது அதனுடைய துடிப்பை பாருங்கள்” புரிகின்றதா? நான் சொன்னேன், “உனக்கு மில்க் லைன் வியாதி வரப்போகின்றது அது ஏற்கனவே உனக்குள் கிரியை செய்துகொண்டு இருக்கின்றது” என்று சொன்னேன். அப்படியே நடந்தது, உயிர் அவளுக்கு போவது போலாயிற்று. 59சகோதரன் மாலிக் என்னிடம், “சகோதரன் பிரன்ஹாம், அதை எப்படி செய்தீர்கள் என்று சொன்னார்?” நான் சொன்னேன், “எனக்கு தெரியாது அது எப்படி என்று என்னால் சொல்ல முடியாது அது தேவன்” என்றேன். ஆகவே நான் கரத்தை இவ்விதமாக வைத்து காண்பித்து இதோ இங்கே என் மனைவி இருக்கிறாள். எனக்கு தெரியும் அவளுக்கு எந்தக் கோளாறும் இல்லை என்று, அன்பே, “உன் கரத்தை என் கழுத்தின் மீது வை” என்றேன். அவள், “அப்படியே செய்தாள்” அப்பொழுது பெண்மை சுரப்பியிலிருந்து ஒரு வளர்ச்சி துடிப்பை அங்கே கண்டேன்; நான், “என் இனிய இருதயமே உனக்கு ஒரு வளர்ச்சி பெண்மை சுரப்பியில் இருக்கிறது” என்று சொன்னேன். அவள், “நான் அதற்கான ஒரு வினாவையும், நான் உரைக்கவில்லை” என்றாள். நான், “இதோ என் கரத்தில் அது இருக்கிறது உன்னுடைய கரத்தை மேலே உயர்த்து” என்றேன், அவளிடம், “கரத்தை உயர்த்தி மீண்டும் வை என்றேன். வைத்தாள், அதை பார்” என்றேன். நாங்கள் வீட்டிற்கு வந்தபோது எங்களுக்கு ஒரு அருமையான வைத்திய நண்பர் இருந்தார், நான் அவரோடு கூட பள்ளிக்கூடத்திற்கு போவேன். பரிசோதனைக்காக நான் அவளை அவரிடம் அழைத்துச் சென்றேன் அவன், “பில்லி அவளிடம் எந்த கோளாறும் இல்லை அவள் எல்லாம் நன்றாக இருக்கிறாள் அங்கே வளர்ச்சி ஏதுமில்லை” என்றான். நான் சொன்னேன், “சாம், உன்னுடைய வார்த்தையில் நான் சந்தேகப்படவில்லை ஏனென்றால் நீ அவளை பரிசோதித்தாய் ஆனால் அங்கே வளர்ச்சி இருக்கிறது” என்றேன். 60மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நான் கடல் கடந்து பிரயாணம் செய்யும் ஒவ்வொரு முறையும், சரீர பரிசோதனைக்கு நான் மட்டுமல்ல யாவரும் செல்லவேண்டும் அப்பொழுது என் மனைவியும் என்னுடன் வந்து அவளுடைய சரீரத்தை பரிசோதித்து கொள்வாள், அப்படி செய்ததில் அந்த வளர்ச்சி கானப்படவே இல்லை. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நான் உள்ளே வந்தேன். அப்பொழுது நான் உண்மையை சொல்ல வேண்டும். பாருங்கள், நான் எதை வேண்டாம் என்று விட்டுவிட கூடாது நீங்கள் எல்லா உண்மையும் சொல்ல வேண்டும். என்னுடைய மனைவியின் பெயரிலுள்ள என்னுடைய அன்பை நான் எடுத்துச் சொன்னேன், இருப்பினும் நாம் காரியங்களில் கவனமாக இருக்க வேண்டும். நான் உங்களிடத்தில் உண்மையை சொல்லுகிறேன். இப்பொழுது எனக்கு சாட்சியாக இருக்கின்ற பரலோக பிதாவானவர் தாமே இது உண்மை என்று அறிவார், ஓ ஒரு வீடு என்றால் எப்படி இருக்கும் இது அதுபோன்ற காரியங்களெல்லாம் தான் இருக்கும், அந்த சந்தர்ப்பத்தில் பாவம் அவள் ஸ்தீரிகளுக்குள்ள வழிபாடு நின்று போகும் கட்டத்தில் இருந்தாள். கடந்த சில ஆண்டுகளாக, அதாவது இரண்டு வருஷங்களுக்கு முன்னர் சரீர பரிசோதனைக்காக சென்றபோது வைத்தியர்கள், இடது ஓவரியில் ஒரு தசை வளர்ச்சி கட்டி இருப்பதாக கண்டனர்; அது ஒரு வால்நட் கொட்டை அளவிற்கு வளர்ந்துவிட்டது, அவர், “சகோதரன் பிரன்ஹாம் நான் அதை மீண்டும் ஒருமுறை பரிசோதிக்கடும், அது வளரும் பட்சத்தில் இன்னும் சில மாதங்களில் அது வெளியே வர வேண்டும்” என்று கூறினார். 61ஆனால் அதற்கு முன்பதாக நான் உங்களுக்கு சொல்ல வேண்டிய ஏதோ காரியம் இருக்கின்றது நான் அதை மறந்துவிட்டேன். ஒரு நாள் நான் ஏதோ காரியம் செய்ய வேண்டும் என்பதற்காக வீட்டிற்குள்ளே வந்து அப்படியே திரும்பி வெளியே போய் விட்டேன். அவள், “அப்பொழுது என்னோடு கொஞ்சம் வரமுடியுமா பில்” என்று கேட்டாள். நான் “இப்பொழுது என்னால் வர முடியாது” என்றேன். அவள், “பெக்கியை குறித்த காரியத்தில் நாம் என்ன செய்யப் போகிறோம்?” என்றாள். நான் சொன்னேன், “தேனே என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை.” என்றேன். 62அங்கு என்னமோ காரியம் நடந்து விட்டது அவள் அவ்வளவாய் அதினால் பாதிக்கப்பட்டவளாக அதனை அவளால் தாக்குப் பிடிக்க முடியாமல் போயிற்று இரவு நெடு நேரம் வரைக்கும் ஜனங்கள் இருந்தார்கள். முந்தைய நேற்று இரவு போன்று காலை ஒரு மணி அளவில் கூட வீட்டில் அங்கே சுற்றி ஜனங்கள் எல்லா இடத்திலும் இருந்தார்கள், ஆனாப்படியினால் அவள் மிகவும் கலவரப்பட்டு இருந்தாள் அவள் என்னிடத்தில் சரக் என்று சொல்லி இருக்கக் கூடாத ஏதோ சொன்னாள் புரிகின்றதா? அவள், “பில் நீர் எப்பொழுது பார்த்தாலும் வெளியே போகின்றீர் நானாகவே இந்த பிள்ளைகளை கவனித்துக்கொள்ள வேண்டியதாயிருக்கிறது, ஒரு போதும் இங்கே இருப்பதில்லை நாம் சேர்ந்து எந்த தீர்மானமும் எடுக்க முடியாதவர்களாய் இருக்கின்றோம், நீர் ஒன்று வெளியே இருக்கின்றீர் அல்லது ஊருக்கு போய் விடுகின்றீர் என்றுச் சொல்லி” அழுதுகொண்டே உள்ளே போய் பட்டு என்று கதவை சாத்தினாள். அந்த நேரத்திலேயே நான், “பாவம் என்ன செய்வாள் நான் கவனிக்கத்தான் வேண்டும் என்று சொல்லி” வெளியே புறப்பட்டேன். அப்பொழுது, என்னிடம்: “II நாளாகமம் 22 வாசி” என்று சொன்னது. மோசே ஒரு எத்தியோப்பிய ஸ்திரீயை விவாகம் பண்ணினதின் நிமித்தமாக மோசேயை கடிந்து கொண்டாள், இதை செய்ததை காட்டிலும் அவளுடைய தகப்பன் அவருடைய முகத்தில் துப்பி இருந்தால் நலமாய் இருக்கும் என்று சொன்னாரே அதைப் பற்றினது அது. 63நான் திரும்பி உள்ளே போய் என் இனிய இருதயமே நீ தவறான காரியத்தை சொன்னாய் என்று சொன்னேன், அவள் அழுது கொண்டு இருந்தாள், “தேனே நீ தவறான காரியத்தை சொன்னாய் தேவன் அதற்காக உன்னை தண்டிக்கப் போகிறார். நீ அப்படி செய்திருக்கக்கூடாது, நானும் கூட மிகவுமாக உறுத்தப்பட்டு இருக்கிறேன் நீ அதைச் சொல்லி இருக்க கூடாது” என்று சொன்னேன். அவள் அதற்கு, “சரி பில் நான் அவ்வளவாக உறுத்தப் பட்டேன்” நான் அப்படியே திரும்பி நடந்து போனேன் ஏனென்றால் நான் சொல்வதை ஏற்றுக் கொள்ளுகின்ற ஒரு நிலைமையில் அவள் இல்லை ஆகவே அப்படியே திரும்பி போய்விட்டேன். அடுத்த பரிசோதனை சுமார் ஒரு மாதம் கழித்து நடந்தது அப்பொழுதுதான் அந்த தசை வளர்ச்சி கட்டி காணப்பட்டது. கடந்த வருஷம் மறுபடியுமாக காணப்பட்டது, அவள் மறுபடியுமாக பரிசோதித்தபோது “அது ஒரு ஆரஞ்சு பழ அளவில் வளர்ந்து விட்டது, இன்னும் அதிக நாட்கள் கடத்த வேண்டாம், அவளுக்கு அறுவை சிகிச்சை செய்யத்தான் வேண்டும். அது வேகமாக வளர்கின்ற ஆபத்தான வளர்ச்சியாக இருக்கின்றது அது எல்லா பக்கமாக வளர்ந்து பக்கவாட்டில் நன்றாய் பற்றிக்கொள்ளுமானால் நீ என்ன செய்ய போகின்றாய் என்று வைத்தியர் என்னிடம்” சொன்னார். நான் சொன்னேன், “வைத்தியரே தேவன் பட்சத்தில் உள்ள விசுவாசம் என்னிடம் உண்டு” என்றேன். நான் அதை குறித்து சபைக்கோ அல்லது யாருக்குமே சொல்லவில்லை, அதை அப்படியே விட்டுவிட்டேன். நாங்கள் ஜெபிக்க துவங்கினோம். நான், “கர்த்தராகிய தேவனே எங்களுக்கு உதவி செய்யும் தயவுசெய்து நீர் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நாங்கள் வேண்டி கொள்கின்றோம்” என்று சொன்னேன். அவ்விதமாக போய்க்கொண்டே இருந்தது அந்த வளர்ச்சியோ மேலும் மேலும் வளர்ந்து கொண்டே போனது. 64பின்னர் நாங்கள் இவ்விடத்தை விட்டு டூசானுக்கு சென்றபோது இங்குள்ள எங்களுடைய வைத்தியர், அங்கு உள்ள அவருடைய வைத்திய நண்பர்களுக்கு செய்தியை அனுப்பி, “திருமதி பிரான்ஹாம் அவர்களுடைய தசை வளர்ச்சியை உடனே அறுவை சிகிச்சை செய்து நீக்கவேண்டும், அப்படி நீங்கள் செய்யவில்லை என்றால், அது மிகவும் ஆபத்தாக இருக்கும்” என்று கூறியிருந்தார். அவர், “ஒரு வருஷத்தில் அது ஒரு வால்நட் அளவில் இருந்து ஒரு பெரிய கிச்சடி பல அளவிற்கு அவ்வளவு பெரிதாய் வளர்ந்துவிட்டது” என்று சொன்னார். அங்கே அது இருந்தது அவளுடைய பக்கவாட்டில் அது பிதுங்கி வெளியே வந்துள்ளது. பரிசோதனைக்கு போவதை அவள் நிறுத்தி விட்டாள். நான், “முயற்சித்துப்பார்” என்றேன். நாங்கள் ஜெபித்தோம், நாங்கள் அழுதோம், நாங்கள் கெஞ்சினோம், எல்லாம் செய்து பார்த்தோம் ஒன்றுமே சம்பவிக்க வில்லை. பின்னர் அவள் வைத்தியரிடம் போகத் துவங்கினாள் போக வேண்டியதாயிற்று பார்ப்போம். நேற்று அவள் முடிவான பரிசோதனைக்காக வைத்தியரிடம் போயிருந்தாள், நான் சரி அதை செய்ய நான் வெறுக்கிறேன், நாம் ஒருகால் அதற்கு இடம் கொடுத்தாக வேண்டும் போலும், “தேனே நீ அதற்கு இணங்கி அதை வெளியே எடுப்பதற்கு அனுமதிக்க வேண்டும். ஏனென்றால் அது பெரிதாகிக்கொண்டே போகின்றன்றது, நமக்கு போதுமான விசுவாசம் இல்லை” என்று சொன்னேன். 65ஆகவே நேற்றைக்கு முந்தின தினம் நான் புறப்படுவதற்கு முன்னர், அவள் என்னிடம், “சகோதரன் ஜாகுடைய கூட்டம் முடியும் வரைக்கும் எனக்கு நீங்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள வேண்டாம். அதன் பின்னர் உங்களுக்கு எந்தவிதமான கூட்டம் இருந்தது என்றும் ஷ்ரெவெபோர்டடில் ஜனங்களெல்லாரும் எப்படி இருக்கிறார்கள் என்று சொல்லுங்கள், அதற்குப் பிறகு வைத்தியர் என்ன சொன்னார் என்பதை நான் உமக்கு சொல்லுகிறேன்” என்று சொன்னாள். நான், “சரி தேனே என்று சொல்லிவிட்டு நான் தொலைபேசியை வைத்துவிட்டேன்.” நேற்றைக்கு முந்தின நாள் நான் வீட்டை விட்டு வெளியே புறப்படும் முன்னர், நான் உள்ளே போனேன், வழக்கமாக வெளியே போகும்போது பிள்ளைகள் நாங்கள் யாவரும் ஒன்றாக சேர்ந்து முழங்கால் படியிட்டு அறையில் ஜெபிப்போம். அவ்வமயம் கர்த்தரிடத்தில் கர்த்தராகிய இயேசுவே நான் அயல்நாட்டு பயணம் போகிறேன் என் குடும்பத்தை கண்காணித்துக் கொள்ளும் என்பேன், அவர்கள் எனக்காக தேவன் எனக்கு உதவி செய்ய வேண்டுமென்று மறுபடியுமாக நாங்கள் சந்திக்க வேண்டும் என்று ஜெபிப்பார்கள். அதன் பிறகு பிள்ளைகள் எல்லாரும் அழுவார்கள் அதுபோன்று உங்களுக்குத் தான் தெரியுமே எப்படி இருக்கும் என்று. 66ஜனாதிபதி கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டதைக் குறித்து பேசுவதா? 300 அல்லது 400 கெஜ தூரத்திலிருந்து, தூர தரிசினி கண்ணாடி பொருத்தப்பட்டுள்ள துப்பாக்கி சூடுகளில் நின்று அனேக நேரத்தில் இரவில் நான் என்னை காத்துக் கொள வேண்டியதாக இருந்தது, பகல் நேரத்தில் எப்படி பார்க்க கூடுமோ அதே விதமாக இரவில் அதன்மூலம் அவர்களால் பார்க்க முடியும். நான் கத்தோலிக்க நாடுகளுக்கு போயிருக்கிறேன், மெக்ஸிகோ இன்னும் பல இடங்களுக்கு அங்கே தீவிரவாதிகள் அங்கே அனுப்பப்பட்டுள்ளன, அவர்கள் எனக்கு தபால் மூலம் தந்தி மூலம் எனக்கு இன்று இரவு உன்னைப் பார்த்து கொள்கின்றோம், என்று செய்தி அனுப்பியுள்ளனர் உள்ளே போவதும் வெளியே வருவதுமாக என்னை தேடுகிறவர்கள் போல் இருப்பார்கள் ஒருக்கால் என்றாவது ஒருநாள் நான் அதைப் பெற்றுக் கொள்ளலாம், அது பரவாயில்லை ஆனால் அப்படி சம்பவிக்கும் போது என்னை காத்துக் கொள்ள என்னிடத்தில் ஏதோ காரியம் இருக்கிறது, புரிகின்றது.? 67அதற்குப் பின்னர் நான் புறப்படுவதற்கு முன்னர் நானாகவே அங்கே முழங்கால் படியிட்டு நேற்றைக்கு முந்திய நாள் என் அறையில் முழங்கால் படியிட்டேன், நான் சுற்றுமுற்றும் பார்த்தேன் நான் சில தினங்களாக அங்கே தனிமையாக இருந்தேன், அந்த வீட்டில் ஒருவரும் இல்லை நான், “பரலோக பிதாவே இப்பொழுது நீர் என் மேல் இரக்கமாயிரும் எனக்கு உதவி செய்யும் உம்முடைய ராஜ்ஜியத்துக்கு உதவியாக என்னால் முடிந்த எல்லா காரியங்களையும் செய்யும்படியாக நான் ஷ்ரெவெபோட்டிருக்கு போகிறேன்” என்று சொன்னேன். நான் சொன்னேன்; இந்த விதமாக நானும் என் மனைவியும் எத்தனை முறை முழங்கால் படியிட்டு ஜெபித்துள்ளோம் இன்றைக்கோ அவள் இல்லாமல் நான் தனிமையாக இருக்கிறேன், நாளைக்கு அவள் வைத்தியசாலைக்குள் போகலாம் நாளைக்கு ஒரு கால் என்னுடைய கூட்டங்கள் இன்னும் முடியாமல் இருக்கலாம் நீர் அப்புறப்படுத்த வேண்டும் என்று நாங்கள் வேண்டிக்கொண்ட அந்த வளர்ச்சியின் நிமித்தமாய் அவள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப் படலாம், அது வளர்ந்து வளர்ந்து கொண்டே போகிறது இன்றைக்கு அது நீக்கப்பட வேண்டியதாக இருக்கிறது, நான் உம்மிடத்தில் கெஞ்சினேன், என்று சொன்னேன். 68தொடர்ந்து நான், “கர்த்தாவே அவள் ஏதோ காரியம் தவறாக சொல்லி இருப்பாலேயானால், அப்பொழுது அங்கே எனக்கு குத்தலாக பட்டது அவள் தவறாக சொல்லி இருப்பாலானால்” நான் சொன்னேன், “கர்த்தாவே உம்முடைய கூட்டத்திற்கு போவதைக் குறித்து ஒரு முறையாவது ஏதாவது ஒரு நேரமாவது அவள் ஏதும் சொன்னதே கிடையாது” என்றேன். அவள் எப்பொழுதும் “அதற்கு தேவையான என்னுடைய துணிகள் எல்லாவற்றையும் சுத்தமாகவும் ஆயத்தமாகவும் வைத்து என்னுடைய கரத்தை பிடித்துக் கொண்டு அழுது ஜெபித்து என்னால் மட்டும் ஏதாவது கர்த்தருக்கு உதவி செய்யக்கூடுமானால் என்று சொல்வாலே” என்றேன். நான், “அவளுடைய நிலைமையை பாரும் அதை செய்யாதிரும் கர்த்தாவே தயவுசெய்து செய்யாதிரும்” என்று சொன்னேன். நான், “தேவனே அவளுக்கு உதவி செய்யும் நீர் அவளிடத்தில் கிருபையாயிருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்” என்று சொன்னேன். அவள் மேல் இரக்கமாயிரும் “கர்த்தாவே நான் அவளை நேசிக்கிறேன் என்று உனக்குத் தெரியும், நீர் அவளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்” என்று சொன்னேன். கர்த்தாவே இப்பொழுது நான் அவளை இழந்து போவேனேயானால் நான் என்ன செய்வேன் என்று ஒன்றும் தெரியாது நான் ஒரு வயதான மனிதன் அந்த சிறு பிள்ளைகள் வளர்க்கப்பட வேண்டும், என்னால் என்ன செய்ய முடியும் அவள் மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே நான் அவளை நேசிக்கிறேன் என்று உனக்கு தெரியும், நீர் அவளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன், என்று சொன்னேன். 69நான் இவ்வாறு ஜெபித்துக் கொண்டு இருக்கும்போது, “எழும்பி காலூன்றி நில்:” என்று ஏதோ சொல்லுகிறதை நான் கேட்டேன். நான் தொடர்ந்து ஜெபித்துக் கொண்டே இருந்தேன்; ஏனென்றால், நான் தானே அவ்வாறு யூகித்துக் கொண்டேன்; என்று நான் நினைத்தேன். நான், “தொடர்ந்து ஜெபித்து கொண்டு இருக்கும்போது எழும்பி காலூன்றி நில்: என்று சொல்லக் கேட்டேன்:” நான் ஜெபத்தை நிறுத்திவிட்டு, “மேலாக நோக்கி பார்த்தேன்; கிறிஸ்துவினுடைய படம் மாட்டி இருந்தது,” நான் சால்மேனின், வரைந்த கிறிஸ்துவின் படத்தை விரும்புவதில்லை, எனக்கு ஹாப்-மேன் வரைந்த கிறிஸ்துவின் படம் தான் பிடிக்கும் அதாவது 33 வயதில் தலை மட்டும். உங்களுக்குத் தெரியும், அதில் ஒரு பெரிய படமெடுத்து அங்கே மாட்டி வைத்துள்ளேன், ஏனென்றால் நான் தரிசனத்தில் அவரை பார்த்தபோது அவர் அந்த வண்ணமாக தான் காணப்பட்டார். அந்த படம் அங்கே மாட்டப்பட்டிருந்தது நான் ஜெபிக்கும்போது அவர் என்னை நோக்கி பார்த்துக் கொண்டிருக்கும் வண்ணமாக அதை சுவற்றில் மாட்டி வைத்து இருந்தேன். நான் அங்கே மேலாக நோக்கி பார்த்தேன்; அந்தப் படத்தை நோக்கி பார்த்தேன்; சுற்றுமுற்றும் பார்த்தேன் நான் இவ்வாரு நினைத்தேன் அது என்னவாக இருக்கும் “அது: எழும்பி காலூன்றி நில்” என்றது. சரி, எலும்பி காலூன்றி நிற்போமே என்று எண்ணி எழுந்து நின்றேன்; 70அன்று இரவு அந்த மலையின்மேல் பேசின அதே சத்தம் எப்பொழுதும் ஒருவர் வருவாரே அவருடைய சத்தம் நான், “தேவனாகிய கர்த்தாவே உன்னுடைய ஊழியக்காரனோடு பேசினது நீர் தானே” என்றேன். அவர்: “வெறுமனே வார்த்தையை கூறு அங்கே அந்த டீயூமர் கட்டி இல்லாமல் போகும்” என்றார். நான் சிறிது அப்படியே நின்று, பின்னர் என் சுய நிலைக்கு வந்தேன், இங்கே இருக்கின்ற வகைகளிலும் ஜெபக் கூட்டத்திலும் இடத்திலும், அனேகர் அவளுக்கு டீயூமர் கட்டி இருந்தது என்று அறிவீர்கள், நா நான் சொன்னேன், “அப்படியானால் அந்த டியூமர் கட்டி அவளை விட்டு நீங்க வேண்டும் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் நான் கூறுகிறேன்” என்றேன். அது அவளை அதிகமாக தொந்தரவு படுத்திக்கொண்டு இருந்தது அந்தக் கட்டியோடு கூட அவள் சுமார் மூன்று அல்லது நான்கு நாட்கள் படுக்கையில் இருந்தாள், நான் சொன்னேன், “அது இருந்ததாகக் கூட எந்த அடையாளமும் கூட இல்லாமல் போகவேண்டும்” என்று. ஏனென்றால் என் தேவனாகிய கர்த்தர் சிருஷ்டி கர்த்தராகிய அவர், காற்றையும் புயலையும் நிறுத்த செய்தவர், கடலை அதட்டி அமைதலாக்கியவர், அவர் வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தவர், நான் அவரை நேசிக்கிறேன், அவரை விசுவாசிக்கிறேன், இவைகளெல்லாம் சம்பவிக்க வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று விசுவாசிக்கிறேன், அணில்களை உண்டாக்கி அதை இருக்கவேண்டிய இடத்திலே ஜீவிக்க செய்த நீர், இருந்த இடத்தில் எதிரியே இல்லாதபடிக்கு வெளியே எடுத்துபோட கூடும், புயலை பிசாசு தன்னை சுற்றிக் கொண்ட போது காற்று தேவனுடைய சிருஷ்டி தண்ணீர் தேவனுடைய சிருஷ்டி ஆனால் பிசாசு அதற்குள் நுழைந்து அதுதான் அதை செய்தது இந்தவிதமான கடலிலே ஒரு சூறாவளியை உண்டாக்கியது உம்மால் அதை அமைதலாக்க முடிந்தது, அதை அமைதியாக முடிந்த உம்மால் என் மனைவியின் இடத்தில் உள்ள டீயூமர் கட்டியை எடுத்துப் போட முடியும். அது, “இச்சனமே சம்பவித்தாயிற்று என்று நான் சொல்லுகிறேன். இனி ஒரு போதும் காணப்படமாட்டாது அது முடிந்து விட்டது என்று” நான் சொன்னேன். 71நான் அங்கிருந்து ஒரு நிச்சய தோடு என் மகனிடமும் மருமகளிடமும் கூறிவிட்டு வெளியே போனேன். நாங்கள் கீழே இறங்கி வந்தோம் கடந்த இரவு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வேண்டி துரிதமாய் ஓடிவந்து முடிந்து திரும்பிப்போய் தொலைபேசியில்… அவளுக்கு இதை குறித்து இன்னமும் தெரியாது, அவளை அழைத்தபோது, அவள் மகிழ்ச்சியாக இருந்தாள்; அவள், “பில்லி, நான் உங்களிடம் இதை சொல்லட்டும் தேனே.” என்றாள். அவள், “அந்த டியூமர் கட்டி மறைந்துவிட்டது அது இருந்ததாக எவ்வித அடையாளமும் இல்லை வைத்தியர் ஒரு அடையாளத்தையும் கண்டுபிடிக்கமுடியவில்லை என்கின்றார் நான் மிகுந்த சந்தோசமாக இருக்கிறேன், திருமதி நார்மன் இன்னமும் அங்குள்ள அனேக சகோதரிகள் இரண்டு அல்லது மூன்று சகோதரிகள் இங்கே என்னோடு கூட அறையில் இருந்தார்கள்” என்றாள். நான், “நீ என்ன சொல்லுகிறாய் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே ஒரு மாதத்திற்கு முன்னரே அது கிரேட் பூட் பழம் போல் அந்த அளவுக்கு வளர்ந்து இருந்தது திருமதி பிரன்ஹாம் கவலைப்பட வேண்டாம் டியூமர் கட்டி ஒரு அடையாளமும் அங்கே இல்லை என்று வைத்தியர் சொல்லுகிறார் என்று கூறினாள் அது எங்கிருந்தது என்று தெரியவில்லையாம். 72அது நமது தேவனாகிய கர்த்தர்; இது நன்றி கூறும் நாளாம், நேற்றும் இன்றும் என்றும் மாறாத வரமாய் இருக்கிறார் எல்லாவற்றிலும் மேலான வரத்தை இயேசு கிறிஸ்து வாகிய வரத்தை நமக்கு தந்தமைக்காக, ஓ தேவனுக்கு நன்றி அது உண்மையாக இருக்கிறது வானத்தின் நேரிலும் அல்லது வேற எதன் பேரிலும் சத்தியம் பண்ணுகிறதில் எனக்கு நம்பிக்கை இல்லை, ஆனால் வேதம் என் இருதயத்தில் இருக்க நான் நேசிக்கின்ற என் தேவன் அறிவார். நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மை என்று. இது நன்றி கூறும் நாள், நாளைக்கு அந்த ஆப்பரேஷன் இருக்கப்போகிறது சில நாட்களுக்குள் இருக்கப்போகிறது என்பதை நான் நினைக்கும் போது நான் கூட்டங்கள் கூட விட்டு விட்டு போக வேண்டியிருக்கும் ஜனங்களிடத்தில் கூட கிறிஸ்துமஸ் நேரத்தில் நான் திரும்பி வருவேன் என்று சொல்லி இருக்க முடியாது வீட்டில் பிள்ளைகளிடத்திலும் கிறிஸ்துமஸக்கு வீட்டிற்கு கொண்டு வந்திருக்க முடியாது, ஒரு கிரேப்புட் பழம் அளவிற்கு உள்ள ஒரு டீயூமர் கட்டியை உடையவளாய் என் மனைவிக்கு ஒரு ஆபரேஷன் காத்துக்கொண்டிருக்கிறது என்று அறிந்தவனாக இருதயத்தில் நடுங்கிக்கொண்டிருந்த நிலைமை அந்தக் கட்டி அங்கே இருந்தது. 73மேலும், “உனக்கு என்ன வேண்டுமோ அதே சொல் அது அந்த விதமாகவே ஆகும்” என்று அந்த தேவனுடைய வார்த்தை சொன்னது: நான், “அந்த டீயூமர் கட்டி போய்விட்டது; அவர்கள் ஒருபோதும் காணப் போவது இல்லை” என்றேன். இதோ, இன்றைக்கு இல்லாமல் போயிற்று டூசான் அரிசோனாவில் இருந்த சிறந்த அறுவை சிகிச்சையாளரும் சிறந்த வைத்தியர்களும் சில நாட்களுக்கு முன்பு ஒரு பெரிய இந்த அளவிற்கு உள்ள ஒரு டியூமர் கட்டி இருக்க கண்டார்கள், அதே வைத்தியர்களால் அது இருந்ததாக எந்த அடையாளத்தையும் கூட அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை, அவர் முழு மனதுடன் திருமதி பிரான்ஹாமிடம் டியூமர் கட்டியின் அடையாளமே இல்லை எங்கேயும் அவர்களிடம் காணப்படவில்லை என்று சான்றிதழ் எழுதி தந்தார்கள். ஓ தேவனுக்கு நன்றி என்று சொல்லுங்கள் இந்த நாள் எனக்கு ஒரு நன்றி கூறும் நாள் இது எல்லாவற்றிற்கும் மேலாக அங்கே நான் திருமணம் செய்து கொண்ட அந்த சிறிய முகம் தேவனுக்கு மகிமை உண்டாவதாக, என்றோ ஒரு நாளில் இந்த வயது சென்ற மரணத்தின் அடையாளங்கள் இல்லாமல் போகும் இனி ஒரு போதும் வயது சென்றவளாக மாட்டோம். இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நமக்கு உண்டாய் இருக்கின்ற நாம் இப்பொழுது பெற்றுள்ள தேவனுடைய வரமாகிய பரிசுத்த ஆவியானவரே இந்த நங்கூரத்தை இதை நமக்கு கொடுத்திருக்கிறார். 74நண்பர்களே இன்றைக்கு அதை நோக்கி பாருங்கள். நீங்கள் நன்றியுள்ள ஜனங்களை குறித்து பேசுகிறீர்கள், ஆனால் நாம் இந்த உலகத்தில் உள்ள எல்லா ஜனங்களை பார்க்கிலும், அதிக நன்றி உள்ளவர்களாய் இருக்க வேண்டியதாய் இருக்கிறது. தெய்வீக சுகம் இங்கே ரொம்ப பிக் கின்ற காரியங்கள் இவைகளுக்கு மிஞ்சி என்ன இருக்கிறது, அதே தன்மைகளோடு அதை அக்கினி ஸ்தம்ப தோடு அதே தேவனுடைய தூதரோடு அதே தேவன் நமக்கு முழுமையான நிச்சயம், நமக்கு கிடைத்து இருப்பதனாலேயே நன்றி உள்ளவர்களாய் இருக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். அதே நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவன் அதே காரியங்களை செய்தார், அதே வல்லமையோடு அதே காரியங்களை செய்தார், என்ன ஒரு ஆத்ம நங்கூரம் மன உறுதி நிச்சயம் நமக்கு கிடைத்திருக்கிறது, பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர்தாமே உங்கள் ஒவ்வொருவரையும் கொளுமையாய் ஆசீர்வதிப்பாராக. நாம் நம்முடைய தலைகளை தாழ்த்துவோம்; 75கர்த்தாவே, நான் மிகவும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன் கர்த்தாவே எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை, என்னால் அதை விவரித்துக் கூற முடியவில்லை. கொஞ்ச நேரத்திற்கு முன்பு அந்தப் பாடல் பாடின போது அந்த ஜனங்கள் அந்த பாடலை பாடின போகுது, என்னுடைய இருதயம் சந்தோஷத்தினால் துள்ளியது, சாட்சியானது என்னுடைய இருதயத்தில் எழும்பினது, இப்போது பரலோகப் பிதாவே, இந்தக் காரியங்கள் யாவும் உண்மையென்று நீர் அறிவீர், என்னுடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து அது உண்மை என்று நீர் அறிவீர் சரியானதை தவிர வேறு எதையும் அவர்களிடத்தில் சொல்வதற்கு கர்த்தாவே என்னிடம் ஒரு காரணமும் இல்லை, கிறிஸ்துவின் கட்டுக்குள் இருக்கின்ற என்னுடைய சகோதர சகோதரிகளாகிய இன்றைய கிறிஸ்துவ சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும், என்னோடு சேர்ந்து நன்றி கூறுதலோடும் கூட என்னுடைய துணைவிக்கு நீர் செய்த காரியத்துக்காக கலி கூறுவதை என் இருதயம் காணும்படியாக செய்ய வேண்டும் என்பதே, தேவனே என்னுடைய ஜெபமாய் இருக்கிறது. இந்த பூமி கர்த்தரை துதியதாக, இயற்கை தேவனை துதிப்பதாக, சுவாசமுள்ள யாவும் கர்த்தரை துதித்து நமக்கு இருக்கின்ற தான இந்த மகத்தான நேரத்திற்காக நன்றியாய் இருப்பதாக. 76அன்புள்ள பரலோக பிதாவே, இங்கே சக்கர நாற்காலியில் ஒரு சிறு பையன் உட்கார்ந்து கொண்டிருக்கிறது நான் காண்கிறேன்; இன்னும் வியாதியும் தேவையுள்ளவர்களாயும் அனேகர் இங்கு அமர்ந்து இருக்கின்றனர், எங்களுடைய ஆத்தும இரட்சிப்புக்கு நீர் தேவானாய் இருக்கிறது போல எங்களுடைய வியாதிகளையும் பாடுகளையும் சுகப்படுத்துகின்ற தேவன் நீரே; இங்கு சொல்லப்பட்ட ஓரிரு சாட்சிகள் அல்ல உன்னுடைய தாழ்மையுள்ள ஊழியக்காரன் ஆயிரக்கணக்கான இப்படிப்பட்ட காரியங்களை நீர் நடப்பித்து செய்ததை கண்டிருக்கிறேன். எல்லா இடங்களிலும் அவைகள் ஒன்றுகூட தவறிப் போனதில்லை, நீர் இன்னமும் யெகோவாயீரேவாய் இருக்கிறீர் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். நீர் சுகப்படுத்தலுக்கான பலியை நீர் ஏற்கனவே செய்து விட்டீர், என் மனைவியின் பக்கவாட்டில் இருந்த அந்த டியூமர் கட்டியை எடுத்துப் போட்ட அதே தேவனானவர், டூசானில் நீர் எவ்வளவு தேவனாயிருந்தீறோ நீர் ஷ்ரெவெபோட்டியிலும் அவ்வளவு தேவனாக இருக்கிறீர். இருப்பினும் நான் அவள் இருந்த தூர இடத்திலிருந்து சுமார் இரண்டாயிரம் மைல் தூரத்தில் இருந்தேன், தேவனே உம்முடைய பிரசன்னம் இந்தக் கூடாரத்தை இன்றைக்கு சுகமளிக்கும் வல்லமையினால் நிரப்பி அது இங்கு இருக்கின்ற வியாதியுள்ளவர்கள் யாவரையும் சுகப்படுத்தி இந்த நன்றி தெரிவிக்கும் ஆசீர்வாதங்கள் கர்த்தாவே இந்த தேசத்தின் ஊடாக போவதும் வருவதுமாக ஒலித்துக்கொண்டு நீரே நேற்றும் இன்றும் என்றும் பாரா தவறாக இருக்கிறீர் என்பதை அறிவிக்கும் படியாய் செய்யும், இதை அறியும் நித்திய பிதாவே; 77இப்பொழுது இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கின்ற நீங்கள் தானே, “உங்கள் கருத்தை மற்றவர்கள் மீது வைத்து ஜெபியுங்கள்” தேவ சமூகத்தில் விசுவாசத்தின் முழுமைப் பாட்டில் உங்களை இணைத்து கொள்ளுங்கள், நீங்கள் ஒவ்வொருவரும் சிலாக்கியம் பெற்றவர்கள் என்பதை நினைவில் வையுங்கள், நான் உண்மையை சொன்னேனா இல்லையா என்பதற்கு தேவன் என்னை நியாயம் தீர்ப்பார், எப்பொழுதாகிலும் தவறிப் போய் இருக்கின்றதா? நான் உங்களிடத்தில் சம்பவியாததை ஏதாவது எப்பொழுதாவது சொல்லி உள்ளேனா? அவ்வமயம் சாமுவேல் சொன்னது போன்று அதாவது அவர்கள் சவுலை ராஜாவாகும் சமயம், கர்த்தருடைய நாமத்தினாலே நான் சொல்லி அவ்விதமாக சம்பவியாமல் போனது ஏதாவது உண்டா? நான் எப்பொழுதாகிலும் உங்களுடைய பணத்திற்காக ஆகாரத்திற்காக கெஞ்சுவது உண்டா என்று சொன்னான்? அவர்கள் அதற்கு நீங்கள் அந்த விதமாய் கேட்டது இல்லை சாமுவேல் ஆனால் எங்களுக்கு ராஜா வேண்டும் எங்களுக்கென்று சொந்தமாக ஒரு பூலோக ராஜா வேண்டும் என்றார்கள். தேவன் தாமே அந்த ராஜா என்று சாமுவேல் அறிந்திருந்தான். 78இன்று காலையில் நண்பர்களே நான் உங்களிடம் கூற விரும்புகிறேன், இந்தக் காலையில் நாம் வாசித்தவைகளில் நீங்கள் எப்பொழுதாவது தேவனுடைய பாரமானது ஒரு முறையாவது தவறு உண்டா? நீங்கள் அதை தெரியப்படுத்துங்கள் இல்லை ஐயா. அது இயேசு கிறிஸ்து அது தவறிப் போக முடியாது விஞ்ஞானம் அதை நிரூபித்தது சபையார் அதை அறிந்துள்ளது அவர் இப்பொழுது சரியாக இந்த மணி நேரத்தில் அவர் இங்கே இருக்கிறார். இருக்கின்ற குறை என்னவென்றால் அந்த வார்த்தையை எடுத்து உங்களுக்காக அபிஷேகிக்க அவர் உங்களை சுகப்படுத்துவார், அதற்கு உங்கள் விசுவாசம் குறைவாக இருக்கிறது; ஒருவர் மேல் ஒருவர் உங்கள் கரங்களை இறுக்க உங்கள் முழு இருதயத்தோடும்; தேவனை நோக்கி சத்தமிட்டு, “தேவனாகிய கர்த்தாவே வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தவரே புயலை தடுத்து நிறுத்தக் கூடியவரே இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னர் நீர் அதை செய்தீர். நீர் அதை மறுபடியுமாக இப்பொழுது அதை செய்யும். என்னுடைய சுகவீனத்தை நீர் நிறுத்தும் என்னை நீர் சுகப்படுத்தும், நான் என் இருதயத்தில் உமக்கு நன்றி உள்ளவனாய் இருக்கிறேன், சர்வவல்லமையுள்ளவர் தேவனே ஆமென்”. என்று கூறுங்கள் ஆமென் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக...